ஓமனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. சுல்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்!
PM Narendra Modi Oman Visit | இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், தனது பயணத்தின் இறுதியாக பிரதமர் ஓமன் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
மஸ்கர், டிசம்பர் 18 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) மூன்று உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பட்டியலில் முதலில் அவர் ஜோர்டான் (Jordan) நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் எத்தியோப்பியாவுக்கு (Ethiopia) பயணம் செய்தார். இந்த நிலையில் தான் தனது பயணத்தின் இறுதியாக ஓமனுக்கு (Oman) சென்றுள்ளார். ஓமனின் மஸ்கட் நகருக்கு சென்றடைந்த இந்திய பிரதமர் மோடியை, அந்த நாட்டின் துணை பிரதமர் சயீத் ஷிஹாப் பின் தாருக் அல் சயத் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார்.
பிரதமர் மோடிக்கு சிறப்பு முறையில் வரவேற்பு
ஓமன் வந்த இந்திய பிரதமர் மோடிக்காக விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி பாரம்பரிய இசைகள், மேள தாளங்கள், சிறுவர் சிறுமியர் நடனம் என மிகவும் உற்சாகமாக அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது இந்திய பிரதமரை மகிழ்ச்சி அடைய வைக்கும் விதமாக வந்தே மாதரம் என்றும், பாரத் மாதா கி ஜே என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.




இதையும் படிங்க : Year Ender 2025: இந்தியர்கள் அதிகமாக பயணம் செய்த டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி
أنا ممتنٌ للترحيب الحار الذي حظيت به في عُمان. إنّ المودة والحماس اللذين أبداهما المجتمع الهندي هنا يعكسان حقاً الروابط الشعبية المتينة بين الهند وعُمان. pic.twitter.com/BPPvH3Efdm
— Narendra Modi (@narendramodi) December 17, 2025
இரு தரப்பு உறவுகள் குறித்து முழு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள பிரதமர்
தனது ஓமன் பயணத்தில் பிரதமர் மோடி, அந்த நாட்டின் அதிபர் சுல்தான் ஹைதம் பின் தாரீக்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கலாச்சார பறிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.