Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி.. இரு நாட்டு உறவு வலுவடையும் என நம்பிக்கை..

PM Modi Visit To Jordan: இந்தியா மற்றும் ஜோர்டான் வலுவான பொருளாதார உறவுகளை பகிர்ந்து கொள்கின்றன. இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளி நாடுகளில் ஒன்றாக ஜோர்டன் உள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகம் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பை கொண்டுள்ளது.

அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி.. இரு நாட்டு உறவு வலுவடையும் என நம்பிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 16 Dec 2025 11:36 AM IST

டிசம்பர் 16, 2025: இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இப்னு அல் ஹுசைனும் சந்தித்து, இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் மதிப்பாய்வு செய்தனர். மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ஜோர்டான் மன்னரின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜோர்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உசைனியா அரண்மனையில் மன்னர் இரண்டாம் அப்துல்லா அவரை அன்புடன் வரவேற்றார். அங்கு, உயர்மட்ட குழு பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக இருவரும் நேரில் சந்தித்து உரையாடினர்.

இந்திய – ஜோர்டான் உறவில் புதிய உத்வேகம்:

இந்த சந்திப்பு இந்தியா – ஜோர்டான் உறவுகளுக்கு புதிய உத்வேகத்தையும் ஆழத்தையும் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்ததாக பிரதமர் மோடி கூறினார் என தெரிவித்தார். வர்த்தகம், உரங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு தொடரும் என அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான பொதுவான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: இந்தியர்கள் அதிகமாக பயணம் செய்த டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!

காசா பிரச்சினையில் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் முயற்சிகளை பாராட்டிய பிரதமர் மோடி, அந்தப் பகுதியில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவும் என நம்புவதாக தெரிவித்தார். பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலுக்கு எதிராக ஜோர்டான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உலகிற்கு வலுவான மற்றும் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளதாக அவர் கூறினார் என தெரிவித்தார்.

மன்னரின் நேர்மையான கருத்துக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி:


இந்தியாவுடன் உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல மன்னர் பகிர்ந்துள்ள நேர்மையான கருத்துகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா – ஜோர்டான் இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடி வருவதாக குறிப்பிட்டார். இந்த மைல்கல், வருங்கால ஆண்டுகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்த உத்வேகம் அளிக்கும் என அவர் தெரிவித்தார் என தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா இந்தியா வந்தபோது, இஸ்லாமிய பாரம்பரியம் குறித்த மாநாட்டில் பங்கேற்றதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். மேலும், மிதமான நிலைப்பாட்டை ஊக்குவிக்கும் அவரது முயற்சிகள் பிராந்திய அமைதிக்கு மட்டுமல்ல, உலக அமைதிக்கும் முக்கியமானவை என அவர் கூறினார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: விசா வேணுமா? சோஷியல் மீடியாவை காட்டுங்க – H1B, H4 விசாவுக்கும் இனி நெருக்கடி!

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் வன்முறை தீவிரவாதத்தை எதிர்ப்பது குறித்த நிகழ்வில் இருவரும் முதன்முறையாக சந்தித்ததை நினைவுபடுத்திய பிரதமர் மோடி, அப்போதும் இந்த விவகாரத்தில் மன்னர் ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்ததாக தெரிவித்தார் என தெரிவித்தார்.

இந்த திசையில் இந்தியாவும் ஜோர்டானும் தொடர்ந்து இணைந்து முன்னேறும் என்றும், பரஸ்பர ஒத்துழைப்பின் அனைத்து பரிமாணங்களையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பின் புதிய பாதை – மன்னர் இரண்டாம் அப்துல்லா:

இந்த சந்திப்பின்போது பேசிய மன்னர் இரண்டாம் அப்துல்லா, இரு நாடுகளும் வலுவான கூட்டாண்மையை அனுபவித்து வருவதாகவும், மக்களின் நலனை மேம்படுத்துவதற்கான உறுதியை பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தார். பல ஆண்டுகளாக இருதரப்பு ஒத்துழைப்பு பல துறைகளில் விரிவடைந்துள்ளதாகவும், பொருளாதார ஒத்துழைப்பின் புதிய பாதைகளை வகுக்க பிரதமர் மோடியின் வருகை முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியா மற்றும் ஜோர்டான் வலுவான பொருளாதார உறவுகளை பகிர்ந்து கொள்கின்றன. இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளி நாடுகளில் ஒன்றாக ஜோர்டன் உள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகம் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பை கொண்டுள்ளது. இந்தியாவிற்கு உரங்கள், குறிப்பாக பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் வழங்குவதில் ஜோர்டன் முன்னணியில் உள்ளது.

மேலும், ஜவுளி, கட்டுமானம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் 17,500-க்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாயகமாகவும் இந்த அரபு நாடு விளங்குகிறது.