மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், சுரங்க பணியில் ஈடுபட்டபோது கிடைத்த வைரம், இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையே மாறிவிட்டது. பன்னா மாவட்டம் ராணிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 24 வயதான சதீஷ் காடிக் மற்றும் 23 வயதான சஜித் முகம்மது என்ற இரண்டு நண்பர்கள், கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் வைரம் தோண்டுவதற்கான லீஸை, கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெற்றிருந்தனர். குடும்ப செலவுகள் மற்றும் தங்களின் சகோதரிகளின் திருமண செலவுக்காக, இந்த சுரங்க பணியில் இறங்கிய அவர்களுக்கு, அதிர்ஷ்டவசமாக 15 காரட் எடையுள்ள உயர்தர வைரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரத்தின் மதிப்பு 50 லட்சத்துக்கும் அதிகம் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.