குறையும் குழந்தை பிறப்பு விகிதம்.. ஆணுறைகளுக்கு அதிக வரி.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சீன அரசு!
China's Birth Rate Crisis | உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக சீனா உள்ளது. ஆனால், அங்கு குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாகவே உள்ளது. அங்கு முதியவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ள நிலையில், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பீஜிங், டிசம்பர் 13 : உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள சீனா (China) கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதத்தில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக சீனா இருந்தாலும், அங்கு பிறப்பு விகிதம் மிக குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் தான் சீன அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, புதிய ஆணுறுரை வரி திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சீனாவில் தொடர் சரிவை சந்திக்கும் குழந்தை பிறப்பு விகிதம்
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வந்தது. இந்த நிலையில் தான் 1980 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அங்கு தம்பதிகளுக்கு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஒருவேளை ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டால் சலுகைகள் மறுக்கப்பட்ட நிலையில், அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அங்கு மக்கள் தொகை கடும் சரிவை சந்தித்தது. அதாவது சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் படிப்படையாக குறைந்தது.
இதையும் படிங்க : Year Ender 2025: பஹல்காம் முதல் வெள்ளை மாளிகை வரை.. 2025ல் நடந்த முக்கிய சம்பவங்கள்!
மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கிய சீனா
குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்து வந்ததை உணர்ந்த சீனா, 2015 முதல் தம்பதிகள் இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. அதுமட்டுமன்றி, 2021 ஆம் ஆண்டு முதல் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்த சீன அரசு அதற்காக சிறப்பு சலுகைகளையும் அறிவித்தது. இருப்பினும் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. அதாவது சீனாவில் தற்போதைய நிலவரப்படி முதியவர்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க : கனடாவில் இருந்து இந்தியர்கள் அதிகளவு வெளியேற்றம்…என்ன காரணம்!
புதிய ஆணுறை வரி திட்டம்
இந்த நிலையில் தான் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு புதிய ஆணுறை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, புதிய மதிப்பு கூட்டப்பட்ட வரி சட்டத்தின்படி, ஜனவரி 1, 2026 முதல் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடை சாதன தயாரிப்புகளுக்கு வரி விளக்கு அளிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.