ஆதாரம் இருந்தால் இந்தியா காண்பிக்கட்டும்.. பாகிஸ்தான் அமைச்சர்கள் ஆவேசம்!
Pakistan Denies Involvement in Pahalgam Attack | ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியாவிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதனை காண்பிக்க வேண்டும் என்று அந்நாட்டின் துணை பிரதமர் இஷாக் தர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான், ஏப்ரல் 24 : பஹல்காம் (Pahalgam) தாக்குதலில் பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிராக ஆதாரம் இருந்தால் இந்தியா அதனை முன்வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தர் தெரிவித்துள்ளார். ஜம்மு & காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் (Jammu & Kashmir Terror Attack) குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், ஜம்மு & காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து இஷாக் தர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பயங்கரவாத தாக்குதலில் பறிபோன் 26 உயிர்கள்
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 24 சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front). பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்புடையதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் துணை பிரதமர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அமைச்சர்கள்
“Pakistan Army is ready for any challenge”, stated Foreign Minister and Deputy Prime Minister Ishaq Dar in response to India’s actions after the Pahalgam incident. #IshaqDar #Pakistan #India #Pahalgam #TOKReports pic.twitter.com/QYfjFq6vQx
— Times of Karachi (@TOKCityOfLights) April 24, 2025
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த பகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர், பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதாரம் இருந்தால் இந்தியா முன்வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தியா மீண்டும் மீண்டும் பழி சுமத்தும் விளையாட்டை விளையாடி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருந்தால் அதனை உலகிற்கு காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தற்காப்புக்காகவே தாங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்போது பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானியர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.