Japan Earthquake: ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!
Tsunami Warning: ஜப்பானில் இந்த 2025ம் ஆண்டில் நிலநடுக்கம் ஏற்படுவது புதிதல்ல. கடந்த 2025 நவம்பர் 9ம் தேதி வடக்கு ஜப்பானில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இவாட் மாகாணத்தின் கடற்கரையில் மாலை 5:03 மணிக்கு ஏற்பட்டது.

ஜப்பான் நிலநடுக்கம்
ஜப்பான் (Japan) கடற்கரையில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதாவது 2025 டிசம்பர் 8ம் தேதி மாலை வடக்கு ஜப்பானில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் (Earth Quake) ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்து, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அதிபயங்கர நிலநடுக்கம் ஹொக்கைடோ பகுதியில் உணரப்பட்டுள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
ALSO READ: சீனா மற்றும் லடாக்கில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்!
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுவது என்ன..?
கிடைத்த முதற்கட்ட தரவுகளின்படி, 2025 டிசம்பர் 8ம் தேதியான இன்று ஜப்பானில் உள்ளூர் நேரப்படி மாலை 7:45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) ஹொக்கைடோ கடற்கரைக்கு அருகில் அட்சரேகை 41°N மற்றும் தீர்க்கரேகை 142.3°E இல் மையப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்தது. மேலும், இந்த நிலநடுக்கம் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 32 மைல்கள் (சுமார் 51 கிலோமீட்டர்) கீழே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி அச்சுறுத்தல்:
🚨 Major earthquake strikes Japan.
A 7.6-magnitude quake hit off Japan’s northeastern coast, triggering an official tsunami warning.
⚠️ Authorities warn waves up to 3 meters (10 feet) could reach coastal areas.
Key details:
• Depth: ~53 km
• Epicenter: ~73 km east-northeast… pic.twitter.com/EFfu8gzUHz— Aayush anand (@aayushanand001) December 8, 2025
ஜப்பானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவசர சேவைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. இருப்பினும், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அணு மின் நிலையங்களில் உயிரிழப்புகள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டது குறித்து எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இருப்பினும், அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
2025 நவம்பர் மாதத்திலும் நில அதிர்வு:
ஜப்பானில் இந்த 2025ம் ஆண்டில் நிலநடுக்கம் ஏற்படுவது புதிதல்ல. கடந்த 2025 நவம்பர் 9ம் தேதி வடக்கு ஜப்பானில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இவாட் மாகாணத்தின் கடற்கரையில் மாலை 5:03 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையம் சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.
ALSO READ: ஜப்பானை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்.. சுமானி எச்சரிக்கை!
சுனாமி எச்சரிக்கை:
கடந்த 2025 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போதும், அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். அப்போது, வானிலை ஆய்வு மையம் 1 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் என்று கணித்த நிலையில், 3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒஃபுனாரோ, மியாகோ மற்றும் கமைஷி போன்ற பகுதிகளில் 10 முதல் 20 சென்டிமீட்டர் வரை சிறிய சுனாமி அலைகள் மட்டுமே பதிவாகின. சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை ஜப்பானில் திரும்பப் பெறப்பட்டது. இந்தநிலையில், மீண்டும் பல நாட்களுக்கு பிறகு இன்று அதாவது 2025 டிசம்பர் 8ம் தேதி அதிர்வுகள் உணரப்பட்டன.