Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

44 பேர் பலி.. பெரும் தீ விபத்து.. ஹாங்காங்கில் பதைபதைக்கும் காட்சிகள்!

Hong Kong Apartment Fire : ஹாங்காங்கில் உள்ள தைபோ வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 44க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த பெரும் தீ விபத்து உள்ளூர் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

44 பேர் பலி.. பெரும் தீ விபத்து.. ஹாங்காங்கில் பதைபதைக்கும் காட்சிகள்!
ஹாங்காங் தீ விபத்து
C Murugadoss
C Murugadoss | Updated On: 27 Nov 2025 08:58 AM IST

ஹாங்காங்கிலிருந்து பல ஷாக் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஹாங்காங்கின் தைபோ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து பரவலான பீதியை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

என்ன நடந்தது?

தீ விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது, இது புகை மூட்டத்தையும் தீப்பிழம்புகளையும் வெகுதூரம் பரவி வருவதைக் காட்டுகிறது. தீயை அணைக்க 700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஹாங்காங்கில், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்த 32 மாடி கோபுரத்திற்கு வெளியே உள்ள மூங்கில் சாரக்கட்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இது வேகமாகப் பரவி அருகில் இருந்த குடியிருப்பு கட்டிடங்களிலும் பரவியுள்ளது. இது குறித்து பேசிய ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ, முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், காணாமல் போனவர்களை அவசரகால குழுக்கள் தேடி வருவதாகவும் கூறினார். தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை ஏற்கனவே ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளதாக அவர் கூறினார். நள்ளிரவுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக லீ கூறினார்.

ஹாங்காங் ஊடக அறிக்கைகளின்படி, தாய் போ மாவட்டம் சீன நிதி மையத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. நெருக்கமான பல குடியிருப்புகள் இருக்கும் பகுதி என்பதால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது சற்று சவாலாக இருந்துள்ளது. தீ விபத்து நடந்த இடத்தில் பல தீயணைப்பு வாகனங்கள் பணியில் இருந்துள்ளன. அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் இருக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைத்திருக்கவும், அமைதியாக இருக்கவும் தீயணைப்புதுறை அறிவுறுத்தியது.

Also Read : நைஜீரியாவில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள்.. காரணம் என்ன?

வீடியோ:

17 ஆண்டுகளுக்கு  பிறகு

17 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டது.
தொண்ணூறு சதவீத மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த மிகப்பெரிய தீ விபத்து நிலை 5 தீ விபத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் கடைசியாக ஏற்பட்ட பெரிய நிலை 5 தீ விபத்து சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது, இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

கைது நடவடிக்கை

இந்த தீ விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக 3 பேரை சந்தேகத்தில் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். தீ விபத்துக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து எந்த விவரங்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேற்கொண்டு பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது