Narendra Modi : அடுத்து வாரம் பிரேசில் செல்லும் பிரதமர் மோடி?.. மேலும் 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!
PM Narendra Modi Visit to Brazil | இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரேசிலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்று அவர் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர் மேலும் 4 நாடுகளுக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டெல்லி, ஜூன் 27 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) 2025 ஜூலை மாதத்தில் பிரேசிலுக்கு (Brazil) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் பிரேசிலுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி அதனுடன் மேலும் 4 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலுக்கு செல்வது ஏன், அதனுடன் இணைந்து வேறு எந்த எந்த நாடுகளுக்கு பயணம் செய்கிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக நாடுகளுக்கு பயணம் செய்து வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதல் பல்வேறு உலக நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் அடுத்த வாரம் அரசு முறை பயணமாக பிரேசில் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிரிக்ஸ் (BRICS – Brazil Russia India China South Africa) அமைப்பின் உச்சி மாநாடு ஜூலை 6, 2025 மற்றும் ஜூலை 7, 2025 ஆகிய தேதிகளில் பிரேசில் நடைபெற உள்ளது.




பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா அங்கம் வகிக்கும் நிலையில், உறுப்பு நாடு என்ற அடிப்படையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைகள் தான், இந்தியா சார்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
#FPWorld There are speculations that Brazil president’s invitation to PM Modi for a state dinner may have led China’s Xi to pull out from the upcoming Brics Summithttps://t.co/De6hyRIBpz
— Firstpost (@firstpost) June 25, 2025
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஏற்று அவர் அடுத்த வாரம் பிரேசிலுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிரேசிலுக்கு செல்வது மட்டுமின்றி மேலும் 4 நாடுகளுக்கு அவர் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி கானா, டிரினிடாட், அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.