AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Elon Musk : ‘விலகுகிறேன்’ – ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் எலான் மஸ்க்.. நடந்தது என்ன?

Elon Musk Resigns from Trump Administration : அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமாக பார்க்கப்பட்ட எலான் மஸ்க் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தகாலம் முடிந்துவிட்டதாக குறிப்பிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

Elon Musk : ‘விலகுகிறேன்’ – ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் எலான் மஸ்க்.. நடந்தது என்ன?
எலான் மஸ்க் மற்றும் ட்ரம்ப்
C Murugadoss
C Murugadoss | Updated On: 29 May 2025 07:56 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் எலோன் மஸ்க், டிரம்ப் நிர்வாகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கு ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்து அவருக்கு பக்கபலமாக நின்றவர் எலான் மஸ்க். மன ரீதியாகவும், பண ரீதியாகவுமே எலான் மஸ்க், ட்ரம்பை சப்போர்ட் செய்தார். அதன்பின் ட்ரம்பின் வெற்றிக்கு பின் எலான் மஸ்க் மிகவும் நெருக்கமாகவே இருந்து வந்தார். பழக்கவழக்கமாக மட்டுமின்றி சில பொறுப்புகளும் எலான் மஸ்க்குக்கு கொடுக்கப்பட்டன.

என்ன நடந்தது?

DOGE என சொல்லப்படும் ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டு அதற்கு தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அதாவது DOGE என்பது, Department of Government Efficiency ஆகும். நாட்டின் செலவுகளை குறைத்து லாபத்தை நோக்கிச் செல்ல திட்டமிடும் ஒரு துறை. அதற்கு தலைவராகவே எலான் மஸ்க் நியமிக்கப்பட்டிருந்தார். 130 நாட்கள் பணிக்காலம் என்ற ஒப்பந்த அடிப்படையில் இந்த துறையை கையில் எடுத்தார் எலான் மஸ்க். 2025 மே மாதம் இறுதியுடன் அந்த ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கிறார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க் X பதிவு

இதை அறிவித்த மஸ்க், X இல் பதிவிட்டதாவது, “சிறப்பு அரசு ஊழியராக எனது நியமிக்கப்பட்ட காலம் முடிவடைகிறது, வீணான செலவினங்களைக் குறைப்பதற்கான வாய்ப்பளித்த ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். DOGE பணி காலப்போக்கில் அரசாங்கத்தை நடத்துவதற்கான ஒரு வழியாக மாறும் போது அது வலுவடையும். எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு முன்பு அவர் டிரம்பின் ‘பிக் பியூட்டிஃபுல்’ மசோதாவை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Big beautiful bill மசோதா

Big beautiful bill என்ற புது சட்ட மசோதாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்தார். இது நாட்டின் செலவினங்களை குறைக்கும் திட்டம். இதற்காக அவர் நாடு முழுவதும் பிரசாரங்களை செய்தும் வருகிறார். ஆனால் இந்த மசோதா மூலம் பயனில்லை என எலான் மஸ்க் நினைக்கிறார். இந்த மசோதாவுக்கான செலவுதான் அதிகம் என அவர் கருதுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் இந்த மசோதா தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது

Follow Us