இந்திய மாணவர்களுக்கு அடுத்தடுத்து சிக்கல்.. டிரம்ப் போட்ட புதிய உத்தரவு.. விசாவுக்கு கண்டீஷன்!
US Visa Restrictions : அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்தே, விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். விசா மீது அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையால் இந்தியா உள்ளிட்ட வெளிநாடு மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒரு புதிய உத்தரவை அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்கா, மே 28 : வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா (student visa) நேர்காணல்களை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அமெரிக்க தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் சர்வதேச மாணவர்கள் மீது டிரம்ப் (us president donald trump) நிர்வாகம் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடு மாணவர்களின் உரிமைகள், சலுகைகள் பலரும் பறிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், விசா காலம் முடிந்தும் வெளியேறாமல் இருந்தால் நாடு கடத்தப்படுவீர்கள் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் அமெரிக்கா வர நிரந்தர தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அரசு எச்சரித்திருந்தது.
அமெரிக்கா அதிரடி உத்தரவு
இதுபோன்ற அமெரிக்கா அரசின் அடுத்தடுத்த நடவடிக்கையால், வெளிநாடு மாணவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது ஒரு அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நேர்காணல்களை தற்காலிகமாக நிறுத்த அனைத்து தூதரகங்களுக்கும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.




வெளிநாடு மாணவர்களுக்கு கட்டுப்பாடு
If you drop out, skip classes, or leave your program of study without informing your school, your student visa may be revoked, and you may lose eligibility for future U.S. visas. Always adhere to the terms of your visa and maintain your student status to avoid any issues. pic.twitter.com/34wJ7nkip0
— U.S. Embassy India (@USAndIndia) May 27, 2025
இந்த முடிவு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கை, மாணவர் பரிமாற்ற F,M,J விசா வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்திய மற்றும் பிற வெளிநாட் மாணவர்கள் தங்கள் பயின்று வரும் கல்வி நிறுவனத்தில் வகுப்புகளை தவிர்த்தால் தங்கள் விசாக்களை இழக்க நேரிடும். மேலும், எதிர்காலத்தில், விசாவுக்கு விண்ணப்ப முடியாது. உங்கள் விசா காலத்தை தாண்டி, அமெரிக்காவில் இருந்தால், நிரந்தராக உங்கள் விசா ரத்து செய்யப்படும்.
இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பதிவிட்டால், சம்பந்தப்பட்ட மாணவரின் விசா மீது நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது.
வெளிநாடு மாணவர்களுக்கு சிக்கல்
2023-24 கல்வியாண்டில் அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாடு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தேசிய வெளிநாட்டு மாணவர் ஆலோசகர் சங்கத்தின் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் அமெரிக்க பொருளாதாரத்தில் வெளிநாடு மாணவர்களின் முதலீடு 43.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. மேலும், அமெரிக்காவில் ஆண்டுதோறும் 3,78,000 வேலைகளில் வெளிநாடு மாணவர்கள் ஈடுபடுகின்றனர். எனவே, டிரம்பபின் புதிய நடவடிக்கையால் லட்சக்கணக்கான வெளிநாடு மாணவர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.