Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பளார்.. பளார்… பிரான்ஸ் அதிபருக்கு விழுந்த அறை? மனைவி செய்த காரியம்.. விமானத்தில் நடந்தது என்ன?

France President Emmanuel Macron Viral Video : வியாட்நாமில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை, அவரது மனைவி கன்னத்தில் அறைந்ததாக சமூக வலைதளங்களில வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோ பேசும் பொருளாக மாறியதை அடுத்து, தனது மனைவியுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்ததாக அதிபர் இம்மானுவேல் மக்ரோன் விளக்கம் அளித்துள்ளார்.

பளார்.. பளார்… பிரான்ஸ் அதிபருக்கு விழுந்த அறை? மனைவி செய்த காரியம்.. விமானத்தில் நடந்தது என்ன?
பிரான்ஸ் அதிபர்Image Source: PTI / X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 May 2025 11:44 AM

பாரீஸ், மே 27 : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை (Emmanuel Macron) அவரது மனைவி விமானத்தில் அறைந்ததாக சமூக வலைதங்களில் வீடியோக்கள் வைரலாகி (France president video viral) வருகிறது. ஆனால், இதற்கு பிரான்ஸ் அதிபர் மறுத்துள்ளார். நாங்கள் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம் என்றும் இதை ஏன் இப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருப்பவர் இம்மானுவேல் மக்ரோன். அங்கு, லிப்ரல்கள், வடதுசாரிகளுடன் ஆட்சி நடத்தி வருகிறது.  2017ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார் இம்மானுவேல் மக்ரோன். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்த நிலையில், இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இம்மானுவேல் மக்ரோன் அரசு முறை பயணமாக வியாட்நாம் சென்றிருக்கிறார்.

பிரான்ஸ் அதிபரை அறைந்த மனைவி?

பிரான்ஸில் இருந்து தனி விமானம் மூலம் மனைவியுடன் வியாநாமுக்கு சென்றிருக்கிறார். வியாட்நாமில் விமானம் தரையிறங்கியது. அப்போது, இம்மானுவேல் மக்ரோன் கீழே இறங்கியபோது, அவரது மனைவி கன்னத்தைதில் அறைந்ததாக வீடியோ பரவியது. அதன்பிறகு, அப்படியே அதனை சமாளித்து கீழே இறங்குவது போன்று வீடியோவில் வெளியானது.

மேலும், மக்ரோன் கீழே இறங்குவதற்கு அவரை மனைவி தள்ளிவிட முயன்ற காட்சிகளும் வெளியாகி உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை அடுத்து, பிரான்ஸ் அதிபருக்கும், அவரது மனைவிக்கு மோதல் இருப்பதாக சோஷியல் மீடியாவில் கருத்துகள் வெளியானது.

இந்த விஷயம் தீயாய் பரவியதை அடுத்து, பிரான்ஸ் அதிபர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் என் மனைவியுடன் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தேன்.  எங்களுடன் நெருக்கமான தருணம் அது. எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது. ஜாலியாக பேசிக் கொண்டிருந்ததை இப்படியாக நினைப்பார்கள்” என்று கூறினார்.

வைரலாகும் வீடியோ

 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் மனைவி பிரிஜிட். இவருக்கு வயது 72 ஆகிறது. மக்ரோனுக்கு 42 வயதாகிறது. இவர்கள் இருவரும் காதலித்து 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பிரிஜிட் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது, மக்ரோனை சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கு 25 வயது வித்தியாசம் இருக்கிறது பிரிஜிட் மக்ரோனின் நிகர மதிப்பு 2025ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர் சொத்து வைத்துள்ளார். இவருக்கு 2.8 மில்லிடன் டாலர் மதிப்பில் சொகுசு பங்களாவை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.