AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சகாரா பலைவனத்தில் பலியான 49 பேர்.. உலகையே அதிர வைத்த கோர சம்பவம்!

49 Died In Sahara Desert | சகாரா பாலைவனம் வழியாக சிலர் லாரியில் பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக லாரி பழுதாகி நின்றுள்ளது. இந்த நிலையில், பல மணி நேர போராட்டத்தில் தண்ணீர், உணவு இல்லாமல் 49 பேர் பலியாகியுள்ளனர்.

சகாரா பலைவனத்தில் பலியான 49 பேர்.. உலகையே அதிர வைத்த கோர சம்பவம்!
49 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 05 Jun 2026 23:31 PM IST

நியாமி, ஜூன் 05 : மேற்கு ஆப்ரிக்க (West Africa) நாடான நைஜரின் சாகாரா பாலைவனத்தில் (Sahara Desert) , உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு தண்ணீரில் இல்லாமல் 49 பேர் பலியான சம்பவம் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சகாரா பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் 49 பேர் பலியான கோர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாகாரா பாலைவனத்தில் பலியான 49 பேர் – கோர சம்பவம்

மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு மத வழிபாட்டில் பங்கேற்றுவிட்டு லாரி ஒன்றில் சிலர் தங்களது தாயகம் திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் சென்றுக்கொண்டு இருந்த லாரி எதிர்பாராத விதமாக, நைஜர் – அல்ஜீரியா எல்லைக்கு அருகே உள்ள அசமகா பகுதியில் வந்தபோது பழுதடைந்து பாலைவன மணலுக்குள் சிக்கி நின்றுள்ளது.

இதையும் படிங்க : ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி – ட்ரம்ப் சந்திக்க வாய்ப்பு.. இரு நாடு உறவுகளுக்குப் புதிய உத்வேகம்!

பல மணி நேரம் போராடியும் சரியாகாத லாரி

இந்த நிலையில், ஓட்டுநரும் லாரியில் பயணம் செய்தவர்களும் வாகனத்தை சரிசெய்ய பல மணி நேரம் போராடியுள்ளனர். ஆனால், வாகனத்தை சரிசெய்ய முடியாமல் போயுள்ளது. அதற்குள்ளால அவர்கள் கையிருப்பில் இருந்த உணவு, தண்ணீர் ஆகியவையும் தீர்ந்துபோயுள்ளது. இந்த நிலையில் நேரம் செல்ல செல்ல பாலைவனத்தின் வெப்பம் தாங்காமல் தண்ணீர் இன்றி 49 பேர் அந்த பாலைவனத்திலேயே துடிதுடித்து பலியாகியுள்ளனர்.

இதையும் படிங்க : குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்.. இந்தியர் பலி!

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இரண்டு பயணிகள்

லாரியில் பயணம் செய்த பலரும் அங்கேயே இருந்துவிட்ட நிலையில், இருவர் மட்டும் அங்கிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் நடந்துச் சென்று தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து உயிர் பிழைத்துக்கொண்டுள்ளனர். தண்ணீர் இல்லாமல் சகாரா பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்த அந்த 49 பேரின் உடல்களும் அங்கேயே ஒரு பொது புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நைஜர் நிர்வாகம் கூறியுள்ளது.

தண்ணீர் இல்லாமல் 49 பேர் சகாரா பாலைவனத்தில் துடிதுடித்து பலியான சம்பவம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us