AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Father’s Day : எது ஒரு கேக் ரூ.5 லட்சமா?.. தந்தையர் தினத்தை கொண்டாட நினைத்தவருக்கு அதிர்ச்சி!

5 Lakh Rupees Father's Day Cake | தந்தையர் தினம் மற்றும் அன்னையர் தினத்தை சிலர் கேக் வெட்டி கொண்டாடுவர். அந்த வகையில் ஆன்லைனில் தந்தையர் தினத்திற்கான சிறப்பு கேக் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Father’s Day : எது ஒரு கேக் ரூ.5 லட்சமா?.. தந்தையர் தினத்தை கொண்டாட நினைத்தவருக்கு அதிர்ச்சி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Jun 2025 13:16 PM IST

தந்தையர் தினத்திற்கு (Father’s Day) ரூ. 5 லட்சத்தில் கேக் விற்பனை செய்யப்படுவதாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை (ஜூன் 15, 2025) தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்காக ஒருவர் ஆன்லைனில் கேக் ஆர்டர் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது, ஒரு கேக் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதை கண்ட அவர், அதனை ஸ்கிரீன்ஷாட் செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அது மிக வேகமாக வைரலாகி வருகிறது. அப்படி என்ன கேக் அது, அதற்கு ஏன் அவ்வளவு விலை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தந்தைய தினம்

உலகில் அன்னையர் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது அதேபோல ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ளது. பெரும்பாலான நபர்கள் இத்தகைய தினங்களை சாதாரணமான ஒரு நாளாகவே கடப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், சிலரோ அன்னையர் தினம், தந்தையர் தினத்தை தங்களது பெற்றோர்களுடன் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தந்தையர் தினத்திற்கு ஆன்லைனில் கேக் வாங்க முடிவு செய்த நபருக்கு ஏற்பட்ட சம்பவம் தான் தற்போது இணையத்தில் பேசி பொருளாக உள்ளது.

ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட தந்தைய தின கேக்

இணையத்தில் வைரலாகும் அந்த ஸ்கிரீன்ஷாட்டில் தந்தையர் தின சிறப்பு Hazelnut Chocolate Cake ஒன்று உள்ளது. தந்தையர் தினத்திற்காக விற்பனை செய்யப்படும் சிறப்பு கேக்காக அது உள்ளது. ஆனால், வெறும் 500 கிராம் எடை கொண்ட அந்த கேக்கின் விலை ரூ.5 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான கேக்கின் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரூ.5 லட்சத்திற்கு கேக்கா? – ஷாக்காகும் நெட்டிசன்கள்

இது குறித்து  பதிவிட்டுள்ள ஒருவர் நான் என் தந்தைக்கு இந்த கேக்கை வெட்டினால் 2BHK வீட்டுக்கான முன்பணம் இது என கூறுவார் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த கேக்கின் விலையை கேட்டு உள்ளே ஏதேனும் வைர மோதிரம் உள்ளது என எனது தந்தை நினைத்துக்கொள்வார் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் கிண்டலாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us