Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : நீர்வீழ்ச்சியில் மது அருந்திய இளைஞர்கள்.. இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ!

Himachal's Lapas Falls Viral Video | இமாச்சல பிரதேசத்தில் உள்ள மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சி தான் லாபாஸ். இங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில், இளைஞர்கள் சிலர் நீர்வீழ்ச்சியின் அருகே மது அருந்தும் வீடியோ வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : நீர்வீழ்ச்சியில் மது அருந்திய இளைஞர்கள்.. இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jun 2025 19:08 PM

இமாச்சல் பிரதேசத்தில் (Himachal Pradesh) உள்ள லாபாஸ் நீர்வீழ்ச்சியில் (Lapas Waterfall) இளைஞர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பெண் ஒருவர், இளைஞர்களின் செயலை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். குழந்தைகள், பெண்கள் என குடும்பங்களாக நீர்வீழ்ச்சிக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், இயற்கையின் பசுமை தன்மையை சீர்குலைக்கும் வகையிலும் நடந்துக்கொள்ளும் அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீர்வீழ்ச்சியில் டேபிள், சார் போட்டு மது குடித்த இளைஞர்கள்

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக உள்ளது தான் இமாச்சல் பிரதேசம். இமாச்சலத்தின் இயற்கை அழகை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு இமாச்சல பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் லாபாஸ் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அதனை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில், அந்த நீர்வீழ்ச்சியில் இளைஞர்கள் சிலர் செய்த செயல் பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருந்துள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியில் சிலர் குளித்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு அருகில் சில இளைஞர்கள் டேபிள், சார் போட்டு மது குடித்துக்கொண்டு இருக்கின்றனர். பொதுவெளிகளில் மதுபானம் குடிக்க கூடாது, அதிலும் குறிப்பாக வனப்பகுதிகளில் மதுபானம் குடிக்க கூடாது என்ற பொது அறிவு கூட இல்லாமல் அந்த இளைஞர் இத்தகைய அநாகரிகமான செயலில் ஈடுபடுகின்றனர்.

இவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருந்த பெண் ஒருவர் அவற்றை தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், இந்தியர்களுக்கு மிக சிறந்த சுற்றுசூழல் அறிவு உள்ளது என அவர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.