Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Zoho Pay : அரட்டை, உலாவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் சோஹோ பே!

Zoho UPI App Launch | இந்தியாவில் கூகுள் பே, போன் பே என ஏற்கனவே பல யுபிஐ செயலிகள் உள்ள நிலையில், தற்போது சோஹோ நிறுவனத்தின் யுபிஐ செயலி அறிமுகமாக உள்ளது. அதாவது சோஹோ நிறுவனம் தனது சோஹோ செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.

Zoho Pay : அரட்டை, உலாவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் சோஹோ பே!
சோஹோ பே
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Oct 2025 13:21 PM IST

இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவை மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pay), பேடிஎம் (Paytm) என பல யுபிஐ செயலிகள் உள்ள நிலையில், யுபிஐ-க்கு புதிய வரவாக மேலும் ஒரு செயலி அறிமுகமாக உள்ளது. சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் சோஹோ (Zoho) நிறுவனம் தான் தனது யுபிஐ செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே சோஹோ நிறுவனத்தின் செயலிகள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிலையில், தற்போது சோஹோ யுபிஐ-ல் கால் பதிக்க உள்ளது. இந்த நிலையில், சோஹோ அறிமுகம் செய்ய உள்ள இந்த புதிய யுபிஐ செயலி குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் யுபிஐ செயலியை அறிமுகம் செய்யும் சோஹோ

சென்னையை தாயகமாக கொண்டுள்ள நிறுவனம் தான் சோஹோ. இந்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான அரட்டை (Arattai), மெட்டாவின் (Meta) வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை முந்தி புதிய சாதனை படைத்தது. மத்திய அமைச்சர்கள் தாங்கள் அரட்டை செயலிக்கு மாறிவிட்டதாக் கூறியதனை தொடர்ந்து இந்த செயலியின் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியது. இதுமட்டுமன்றி, குரோம் (Chrome) செயலிக்கு போட்டியாக சோஹோவின் உலா (Ulaa) செயலியும் அறிமுகமானது. இந்த நிலையில் தான் தற்போது சோஹோ பே செயலி அறிமுகமாக உள்ளது.

இதையும் படிங்க : Moto 06 Power : மோட்டோ 06 பவர் ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!

ஏற்கனவே பண பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் சோஹோ

சோஹோ நிறுவனம் ஏற்கனவே தனது அரட்டை செயலி மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. தகவல் பரிமாற்றம் மற்றும் பண பரிவர்த்தனை ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்ட செயலியாக இது உள்ளது. இந்த நிலையில் தான் பண பரிவர்த்தனைக்கான பிரத்யேக செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக சோஹோ அறிவித்துள்ளது. சோஹோ நிறுவனத்திற்கு பண பரிவர்த்தனை செய்வதற்கான லைசன்ஸ் உள்ளது. இந்த நிலையில் தான் யுபிஐ செயலியை அறிமுகம் செய்யும் முயற்சியை சோஹோ கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : Emergency Call மூலம் ஒரு உயிரையே காப்பாற்றலாம்.. எப்படி தெரியுமா?

சோஹோ நிறுவனத்தின் அரட்டை, உலா ஆகிய செயலிகள் ஏற்கனவே இருக்கும் செயலிகளை பின்னுக்கு தள்ளியுள்ள நிலையில், சோஹோ அறிமுகம் செய்ய உள்ள இந்த சோஹோ பே (Zoho Pay) செயலியும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.