AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WhatsApp-ஆல் உங்க ஸ்டோரேஜ் சீக்கிரம் காலியாகுதா? புதிய டவுன்லோடு குவாலிட்டி அம்சம் இதோ

WhatsApp’s New Feature Alert : வாட்ஸ்அப்பில் உள்ள மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால் தினசரி வரும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களால் நமது ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் விரைவில் காலியாகிவிடும். இந்த பிரச்னையை சரி செய்ய வாட்ஸ்அப் புதிய டவுன்லோடு குவாலிட்டி என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

WhatsApp-ஆல் உங்க ஸ்டோரேஜ் சீக்கிரம் காலியாகுதா? புதிய டவுன்லோடு குவாலிட்டி அம்சம் இதோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Jun 2025 18:52 PM IST

சமூக வலைதளங்களின் (Social Media ) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் இதனை கையாள்வதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மீடியோ மேனேஜ்மென்ட் செய்வது சவாலானதாக இருக்கிறது. குறிப்பாக வாட்ஸ்அப்பில் (WhatsApp) நாளான்றுக்கு நூற்றுக்கணக்கான வீடியோக்கள், போட்டோக்கள் வருகிறது. இவை நேரடியாக நம் மொபைல் ஸ்டோரேஜில் சென்றடைகிறது. அதில் சில எச்டி குவாலிட்டி கொண்டவை என்பதால் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜை விரைவில் ஆக்கிரமிக்கின்றன. இது பயனர்களுக்கு மிகப் பெரும் சவலானதாக இருக்கிறது. இந்த பிரச்னையை சரி செய்யும் வகையயில் டவுன்லோடு குவாலிட்டி (Download Quality) என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்பில் ‘Download Quality’ வசதி

பெரும்பாலான வாட்ஸ்அப் பயனர்களும் தினமும் ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்குமென்ட்கள் பெறுகிறார்கள். குறிப்பாக ஒருவர் பல வாட்ஸ் அப் குரூப்களில் இருந்தால் ஹை குவாலிட்டி  வீடியோக்கள் தானாகவே டவுன்லோடு ஆகி, சீக்கிரமே மெமரியை காலி செய்கின்றன. இதனை சமாளிக்க, வாட்ஸ்அப் தற்போது Download Quality என்ற வசதியை சோதனையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் தாங்கள் பெறும் வீடியோக்கள், போட்டோக்கள் மற்றும் டாக்குமென்ட்களின் தரத்தை தாங்களை தேர்வு செய்து கொள்ள முடியும். உதாரணமாக எச்டி அல்லது எஸ்டி ஆகிய வீடியோக்களை நம் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்ய முடியும். இதன் மூலம் தேவையற்ற மீடியோக்களின் குவாலிட்டியான ஃபார்மெட்களை தவிர்த்து சாதாரண வீடியோவாக தேர்வு செய்ய முடியும். இதனால் உங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் இடத்தை பாதுகாக்க முடியும்.

WABetaInfo வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த வசதி தற்போது WhatsApp Android Beta 2.25.18.11 என்ற பதிப்பில் சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பதிப்பின் மூலமாக நாம் வாட்ஸ்அப்பின் புதிய டவுன்லோடு குவாலிட்டியை பரிசோதனை செய்ய முடியும். இதற்காக Settings > Storage and Data > Auto-Download Quality என்ற ஆப்சன் மூலம் நமக்கு கிடைக்கும் மீடியாக்களை எச்டி அல்லது எஸ்டி தரத்தை தேர்ந்தெடுக்க முடியும்.

யாருக்கெல்லாம் இது பயனாகும்?

குறைந்த ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி சிறப்பானதாக இருக்கும். அதே போல ஒரு நாளில் அதிக அளவில் மீடியா பெறும் பயனர்களுக்கு இந்த வசதி சரியானதாக இருக்கும். மேலும் டேட்டாக்களை அதிகம் இழக்க விரும்பாதவர்களுக்கும் இந்த வசதி வரப்பிரசாதமாக இருக்கும். இந்த அம்சம் தற்போது சில Android பயனர்களுக்கே கிடைக்கிறது. சோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு, அனைத்து பயனர்களுக்கும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பின் இந்த புதிய ‘Download Quality’ வசதி,  ஸ்டோரேஜ் விரைவில் காலியாகும் பிரச்னையை தீர்க்க ஒரு சிறந்த முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது பயனர்களை தங்களுடைய ஸ்டோரேஜ் மற்றும் டேட்டாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் வாட்ஸ்அப்பில் மேலும் பல பயனுள்ள அம்சங்கள் வருவதற்கான ஒரு முன்னோடியாக பார்க்கப்படுகிறது.

Follow Us