AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாட்ஸ்அப்-இல் புதிய AI வசதி: போட்டோ பகிர்ந்து பதில் கேட்கலாம், சாட்பாட் உருவாக்கலாம்!

WhatsApp AI Photo Feature : வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியாக இருந்து வருகிறது. வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ மூலம் நீங்கள் அனுப்பும் புகைப்படங்களை புரிந்துகொண்டு பதிலளிக்கவும், கூடுதல் விவரங்களை வழங்கவும், தேவையான மாற்றங்களைச் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்-இல் புதிய AI வசதி: போட்டோ பகிர்ந்து பதில் கேட்கலாம், சாட்பாட் உருவாக்கலாம்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Jun 2025 17:50 PM IST

வாட்ஸ்அப் (WhatsApp) ஒரு சாதாரண மெசேஜிங் செயலியாக ஆரம்பித்து, இன்று உலகில் பெரும்பாலானோர் தினசரி பயன்படுத்தும் மிக முக்கியமான தொடர்பு வழிமுறையாக மாறியுள்ளது. சாதாரண உரையாடல்களில் தொடங்கி, புகைப்படம் பகிர்தல், வீடியோ, ஆடியோ, டாக்குமென்ட்கள் என அனைத்தையும் பகிரும் வசதியை வழங்கும் வாட்ஸ்அப், தற்போது ஏஐ வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. மெட்டா நிறுவனத்தின் Meta AI-யை இணைக்கும் இந்த புதிய அம்சம், நீங்கள் அனுப்பும் புகைப்படங்களை புரிந்துகொண்டு பதிலளிக்கவும், கூடுதல் விவரங்களை வழங்கவும், தேவையான மாற்றங்களைச் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி மெட்டா ஏஐ மூலம் துல்லியமான தகவல்களை பெறும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், மெட்டா ஏஐ தொழில்நுட்பத்தை நாள்தோறும் மேம்படுத்தி வருகிறது. தற்போது, பயனர்கள் தங்கள் புகைப்படங்களையும் டாக்குமென்ட்களையும்  மெட்டா ஏஐ உடன் நேரடியாக பகிர்ந்து, தகவல்கள், விளக்கங்கள் மற்றும் மாற்றங்களைப் பெறலாம்.

மெட்டா ஏஐயில் புதிய வசதிகள்

மெட்டா ஏஐயை பயன்படுத்தி ஒரு புகைப்படத்தை ஃபார்வேர்டு செய்து, அதைப் பற்றி கேள்விகள் கேட்கலாம். உதாரணமாக இந்த படம் உண்மையா? அதில் உள்ள பொருட்களின் விவரங்கள்? இவை எங்கே கிடைக்கும்? போன்ற விரவங்களை கேட்கலாம். மேலும் புகைப்படங்களை எடிட் செய்து தரக் கோரலாம். உதாரணமாக, பிரைட்னஸ் அதிகப்படுத்தி கேட்கலாம். அல்லது புகைப்படங்களின் பின்னணியை மாற்றிக் கேட்கலாம்.  இந்த அம்சம் தற்போது WhatsApp Beta பதிப்பில் வெர்ஷன் 2.24.14.20 கிடைக்கிறது.

ஏஐ சாட்பாட்கள் உருவாக்கும் வசதி

வாட்ஸ்அப்பில் நமக்கென பிரத்யேகமாக தனிப்பட்ட முறையில் ஏஐ சாட்பாட்களை உருவாக்கலாம். இதற்காக உங்களுக்கு அதற்கான புரோகிராமிங் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களைப் பற்றி விவரங்களை சொல்லி அதன் அடிப்படையில் உங்களுக்கு என பிரத்யேகமாக ஏஐ சாட்பாட் உருவாக்கி தரும். அதில் உங்களுக்கு என தனிப்பட்ட முறையில் உரையாடலாம். அது உங்களது நண்பனை போல செயல்படும்.

Imagine Me வசதி

பயனர்கள் தங்கள் படங்களை மெட்டா ஏஐ உடன் பகிர்ந்து Imagine me என்ற கீ-வேர்டை பயன்படுத்தி AI-generated image உருவாக்கலாம். இந்த போட்டோவை நீங்கள் விரும்பும் வகையில் உருவாக்கலாம். மேலும் எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். இது ஒரு தனிப்பட்ட உரையாடலாக இருக்கும்.

மெட்டா ஏஐ பக்கத்தில் நீங்கள் அனுப்பும் படங்களையே மட்டும் புரிந்து கொண்டு பதிலளிக்கும். இதனால் மற்ற மெசேஜ் சேவைகள்  பாதிக்கப்படாது. மேலும்  வாட்ஸ்அப்பில் Settings > Meta AI பகுதியிலிருந்து புகைப்படங்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். இந்த புதிய வசதிகள் பயனர்களுக்கு மேலும் சுதந்திரம், அனுபவம் மற்றும் தனிப்பட்ட முறையில் பலனளிக்கிறது. குறிப்பாக சாட்பாட் போன்ற சேவைகள் பயனர்களுக்கு முழுமையாக பலனளிக்கக் கூடியது.

Follow Us