Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேர் செய்யும் புதிய வசதி – எப்படி பயன்படுத்துவது?

WhatsApp Screen Sharing Feature : வாட்ஸ்அப் தற்போது மிகவும் அத்தியாவசியமான செயலியாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு புதிய ஸ்கிரீன் ஷேர் ஆப்சனை வழங்கியிருக்கிறது. ஆன்லைன் வகுப்பில் இருக்கும் மாணவர்கள், வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். இதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேர் செய்யும் புதிய வசதி – எப்படி பயன்படுத்துவது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 10 Jun 2025 22:10 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் செயல்படும் இன்ஸ்டண்ட் மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அதன் பயனர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, வீடியோ அழைப்பின் போது உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் ஸ்கிரீனை மற்றவர்கள் பார்க்கும்படி பகிர்வதை அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு (Android), ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாடுகளிலேயே இந்த வசதி தற்போது கிடைக்கிறது. இந்த ஸ்கிரீன் ஷேரிங் வசதி, கல்வி, பணியாளர்கள் வேலை சார்ந்து மற்றும் தொழில்நுட்ப உதவிக்கான சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முக்கியமாக, நீங்கள் பகிரும் ஸ்கிரீனில் தெரியும் விஷயங்களில் பாஸ்வேர்ட்கள்,  லாகின் விவரங்கள் உள்ளிட்டவை மற்றபக்கத்தில் இருப்பவர்களால் பார்க்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாட்ஸ்அப் உறுதி செய்யும் விஷயம் என்னவெனில், உங்கள் ஸ்கிரீன் பகிர்வு முழுமையாக end-to-end encryption  பாதுகாக்கப்படுகிறது என்பது இதன் கூடுதல் சிறப்பு. இது வாட்ஸ்அப்பில் பதிவாகாது மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களை தவிர வெளியே யாராலும் பார்க்க முடியாது.

வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேர் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் ஸ்கிரீன் ஷேர் செய்யும் முறை

  • வாட்ஸ்அப்பை திறந்து ஒரு வீடியோ அழைப்பை தொடங்குங்கள்.
  • திரையின் கீழே உள்ள “Screen Share” ஐகானை  கிளிக் செய்யவும்.
  • Screen Share செய்யும் விருப்பத்தை உறுதிப்படுத்துங்கள்.
  • இப்போது உங்கள் ஸ்கிரீன், அழைப்பில் இருப்பவர்களுக்குத் தெரியும்.
  • பகிர்வதை நிறுத்த “Stop Sharing” என்பதனை வாட்ஸ்அப்பில் திரும்பி சென்று கிளிக் செய்யவும்.

விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாட்டில் ஸ்கிரீன் ஷேர் செய்யும் முறை:

  • WhatsApp டெஸ்க்டாப் ஆப்பை திறந்து வீடியோ காலை தொடங்குங்கள்.
  • கால் விண்டோவில் உள்ள “Share” ஐகானை கிளிக் செய்யவும்.
  • முழு ஸ்கிரீனையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ பகிர வேண்டுமா என்பதை தேர்வு செய்யவும்.
  • பகிர்வதை நிறுத்த வேண்டுமானால் “Stop screen sharing” ஐகானை கிளிக் செய்யவும்.
  • முழு ஸ்கிரீனை பகிர்ந்தால், நீங்கள் திறக்கும் எந்த ஆப்பும் மற்றவர்களுக்கு தெரியும்.
  • குறிப்பிட்ட ஒரு செயலியை மட்டும் பகிர விரும்பினால், அது மட்டுமே பார்வைக்கு இருக்கும்.

இந்த வசதி தொழில்நுட்ப ரீதியாக வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு, வீடியோ கான்பிரன்ஸ், டெமோ வழங்கல், லைவ் பயிற்சி போன்ற சூழ்நிலைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், தனிப்பட்ட தகவல்களை பகிரும் பொழுது உன்னிப்புடன் கவனம் செலுத்துவது அவசியம்.

விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!...
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்...
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா...
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...