தனித்தனி ரிங்டோன் முதல் பின் சாட்கள் வரை.. வாட்ஸ்அப்பில் கட்டணத்துடன் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்!

WhatsApp Plus Service Will Be Introduced In WhatsApp | வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு அசத்தல் அம்சங்களுடன் கூடிய வாட்ஸ்அப் பிளஸ் கட்டண முறையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தனித்தனி ரிங்டோன் முதல் பின் சாட்கள் வரை.. வாட்ஸ்அப்பில் கட்டணத்துடன் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்!

மாதிரி புகைப்படம்

Published: 

10 Mar 2026 16:29 PM

 IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல்வேறு அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் உள்ள நிலையில், அதில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை மெட்டா அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பில் மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்அப் செயலியில் கட்டண சேவையை அறிமுகம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் விரைவில் வரவுள்ள கட்டண சேவை

பயனர்களை கவரும் வகையில் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் பிளஸ் (WhatsApp Plus) என்ற பிரீமியம் சேவையை கட்டண சேவையாக அறிமுகம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது. தற்போது அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் இருப்பதை விட இந்த வாட்ஸ்அப் பிளஸ் சேவையை பெரும் பயனர்களுக்கு கூடுதலான சிறப்பு அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : EMI-ல் ஐபோன் வாங்குவது சிறப்பானதா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?

புரொஃபைலை தாங்களாகவே வடிவமைத்துக்கொள்ளலாம்

இந்த வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் புரொஃபைலை (WhatsApp Profile) தாங்களாகவே வடிவமைத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதாவது, செயலியின் தோற்றம், முக்கிய வண்ணங்கள் மற்றும் செயலியின் ஐகான் மாற்றும் வசதிகள் ஆகியவை இந்த வாட்ஸ்அப் பிளஸ் சேவையை பயன்படுத்தும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கும் என்று வாட்ஸ்அப் குறித்த அப்டேட்டுகளை வெளியிடும் வாபீட்டா தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : டிவி ரிமோட்டில் உள்ள மஞ்சள், பச்சை, நீலம் பட்டன்கள் எதற்காக தெரியுமா? ஆச்சரிய தகவல்

தனித்தனி ரிங்டோன் முதல் பின் சாட்கள் வரை

தற்போது பயனாட்டில் உள்ள வாட்ஸ்அப்பில் ஒரு கணக்கில் மூன்று சாட்களை மட்டுமே பின் செய்ய முடியும். ஆனால், இந்த வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தில் குறைந்தது 20 சாட்களை பின் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு தனித்தனி ரிங்டோன்கள் செட் செய்துக்கொள்ளும் அம்சமும் இதில் வழங்கப்பட உள்ளது. இத்தகைய அட்டகாசமான அம்சங்களை கொண்ட இந்த வாட்ஸ்அப் பிளஸ் அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் இந்த அம்சம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..