Samsung Galaxy S24 FE 5G : அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ 5ஜி!
Samsung Galaxy S24 FE 5G | அமேசான் நிறுவனம் பல மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. அதன் மூலம் ரூ.59,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வெறும் ரூ.35,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு (Apple iPhones) அடுத்தபடியாக பிரபலமாக உள்ளது என்றால் அது சாம்சங் ஸ்மார்ட்போன்கள் (Samsung Smartphones) தான். சாம்சங் ஸ்மார்ட்போன்கள் நல்ல தரம் மற்றும் செயல்பாட்டை கொண்டுள்ளதால் பெரும்பாலான பொதுமக்கள் அதனை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், ஐபோன்கள் அளவுக்கு சாம்சங்க் ஸ்மார்ட்போன்களின் விலையும் சற்று அதிகமாக இருக்கும். இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S24 FE 5G) ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரூ.59,999 மதிப்பிலான ஸ்மார்ட்போனை வெறும் ரூ.35,655-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன், இந்தியாவில் ரூ.59,999-க்கு அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனின் Fan Edition ஸ்மார்ட்போன் அமேசான் இணையதளத்தில் தள்ளுபடியில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.40,000-க்கு குறைவாக வாங்கிக்கொள்ள முடியும்.
சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ 5ஜி சலுகைகள்
8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன், அமேசான் தளத்தில் ரூ.35,655-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 256 ஜிபி ஸ்டோரே கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.43,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.59,999 மதிப்பிலான ஸ்மார்ட்போனை வெறும் ரூ.35,655-க்கும், ரூ.65,999 மதிப்பிலான ஸ்மார்ட்போனை வெறும் ரூ.35,655-க்கும் வாங்கிக்கொள்ளலாம்.
மேலும் சில சிறப்பு அம்சங்கள்
மேற்குறிப்பிட்ட சலுகைகள் மட்டுமன்றி, சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும்போது வங்கி கார்டுகளை பயன்படுத்தும் நபர்களுக்கும், மாத தவணை மூலம் வாங்குவோருக்கும் ரூ.1,250 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். இந்த தள்ளுபடியின் மூலம் மேலும் விலை குறைந்து சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.34,405-க்கு கிடைக்கும்.
அமேசானில் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க மாதத்தில் ரூ.1,729 முதல் வட்டி இல்லா மாத தவணை வழங்கப்படுகிறது. மேலும் அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கு பட்சத்தில் ரூ.1,069 வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.