Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெற்றோர்கள் கவனத்துக்கு! உங்கள் குழந்தைகள் தவறான வீடியோக்கள் பார்க்க கூடாதா? அப்போ யூடியூப் இன்ஸ்டாகிராமில் இத பண்ணுங்க!

Child Online Safety: இப்போதெல்லாம் குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவது இன்றியமையாததாகிவிட்டது. ஆன்லைன் வகுப்புகள், பள்ளி வேலைகள் உள்ளிட்டவற்றிற்கு அவர்களுக்கு ஸ்மார்ட்போன் தேவைப்படுகிறது. இந்த சூழலில் குழந்தைகள் தவறான வீடியோக்களை பார்ப்பதை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பெற்றோர்கள் கவனத்துக்கு! உங்கள் குழந்தைகள் தவறான வீடியோக்கள் பார்க்க கூடாதா? அப்போ யூடியூப் இன்ஸ்டாகிராமில் இத பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Jan 2026 16:34 PM IST

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் (Smartphone) தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள், பள்ளி வேலைகள் என பல காரணங்களுக்காக குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் தேவை அதிகரித்திருக்கிறது. ஆனால் அதுவே பெற்றோருக்கு மிகப்பெரிய கவலையாகவும் மாறியுள்ளது. வயதிற்கு பொருந்தாத கண்டென்ட்களை குழந்தைகள் பார்க்க நேரிடுமோ என்ற அச்சம் பெற்றோர்களிடம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான சேல்ஃபோர்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் 73 சதவீதம் பேர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாகவும், அதில் 65 சதவீதம் பேர் Gen-Z தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஏஐ மற்றும் டிஜிட்டல் தளங்களில் அதிகமாக ஈடுபட்டு வருவதை காட்டுகிறது.

குழந்தைகளை கண்காணிக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

இது குழந்தைகளை உளவு பார்ப்பது அல்ல, பாதுகாப்புக்கான புத்திசாலித்தனமான கண்காணிப்பே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெற்றோர் பலர் குழந்தைகளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுகிறோமா என்ற தயக்கத்தில் இருக்கலாம். ஆனால் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு அவசியம். ‘வாட்சர்’ போன்ற சில கண்காணிப்பு செயலிகள், குழந்தையின் டிஜிட்டல் செயல்பாடுகளை முழுமையாக கண்காணிக்க உதவுகின்றன. இந்த செயலிகள் மூலம் குழந்தைக்கு வரும் நோட்டிஃபிகேஷன், அவர்கள் பயன்படுத்தும் செயலிகள், ஒவ்வொரு செயலியிலும் செலவிடும் நேரம், லைவ் லொகேஷன் வரை பெற்றோர் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தவறான பழக்கங்கள் ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்தால், பெற்றோர் உடனடியாக தலையிட்டு சரிசெய்ய முடியும்.

இதையும் படிக்க : Instagram : இன்ஸ்டாவில் இருந்து உங்களுக்கு பாஸ்வேர்டு மாற்றம் குறித்து மெயில் வந்ததா?..உண்மை இதுதான்!

குழந்தைகள் ஏஐ டூல்களை பயன்படுத்துவதை எப்படி கட்டுப்படுத்துவது?

ஏஐ பயன்பாடுகளும் தற்போது குழந்தைகளிடையே வேகமாக பரவி வருகின்றன. பள்ளி வேலைகளுக்காக சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி போன்ற ஏஐ கருவிகளை குழந்தைகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்  ChatGPT-யில் ‘Family Account’ அமைப்பின் மூலம் குழந்தைகள் பயன்பாட்டை பெற்றோர் கண்காணிக்கலாம். செட்டிங்ஸ் பகுதியில் ‘Parental Controls’ தேர்வு செய்து, குழந்தையின் மின்னஞ்சல் முகவரியை சேர்ப்பதன் மூலம் அவர்களின் பயன்பாடு மற்றும் சாட் ஹிஸ்டரி ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும்.

அதேபோல், Google Gemini பயன்பாட்டை Google Family Link மூலம் பெற்றோர் கட்டுப்படுத்தலாம். Family Link செயலியை பதிவிறக்கம் செய்து, குழந்தையின் ஜிமெயில் கணக்கை இணைத்த பிறகு, எந்த பயன்பாடுகளை அவர்கள் பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது என்பதையும் பெற்றோர் நிர்ணயிக்க முடியும். இதன் மூலம் குழந்தைகள் ஏஐயிடம் என்ன கேட்கிறார்கள், அதற்கு என்ன பதில் கிடைக்கிறது என்பதையும் கண்காணிக்க முடியும்.

இதையும் படிக்க : அடிக்கடி போனில் வரும் நோட்டிஃபிகேஷன்களால் தொல்லையா? அப்போ இதை டிரை பண்ணுங்க

சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடுகள்

சமூக வலைதளங்கள் தான் குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறிவருகின்றன. குறிப்பாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் தவறான வீடியோக்கள் எளிதில் கிடைக்கக்கூடிய சூழல் உள்ளது. யூடியூபில் குழந்தைகளுக்கான தனி ப்ரொஃபைலை உருவாக்கி, Family Center அல்லது Google Family Link மூலம் வயதிற்கு பொருந்தாத தேடல்கள் மற்றும் பரிந்துரைகளை முழுமையாக தடுக்கலாம். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இது கட்டாயமாக செயல்படுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதே போல் இன்ஸ்டாகிராமில் ‘Supervision Mode’ மூலம் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் யாருடன் உரையாடலாம், எந்த வகையான ஏஐ இமேஜ்களை பயன்படுத்தலாம், எந்த முக்கிய சொற்களை தடுக்க வேண்டும் என்பதையும் பெற்றோர் தீர்மானிக்க முடியும்.