அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஓப்போ ரெனோ 15 சீரீஸ்!
Oppo Reno 15 Series Launched | ஒப்போ நிறுவனம் தனது ஓப்போ ரெனோ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரீஸில் ஓப்போ நிறுவனம் மொத்தம் 4 மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஓப்போ (Oppo) நிறுவனம் தனது ஓப்போ ரெனோ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Oppo Reno 15 Series Smartphones) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம் அனுபவம் மற்றும் சிறந்த கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை தேடும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த நிலையில், ஓப்போ நிறுவனம் தனது ஓப்போ ரெனோ 15 சீரீஸில் என்ன என்ன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒப்போ ரெனோ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
ஓப்போ ரெனோ 15 சீரீஸ் மொத்தம் நான்கு மாடல் ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ளது. அவற்றில் வெனிலா ரெனோ 15 (Vanilla Reno 15), ரெனோ 15 ப்ரோ (Reno 15 Pro), ரெனோ 15 ப்ரோ மினி (Reno 15 Pro Mini) மற்றும் ரெனோ 15 சி (Reno 15 C) ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இந்த நான்கு ஸ்மார்ட்போன்களும் புதிய கேமரா தோற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை பார்ப்பதற்கு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் மாடல்களை போல் தோன்றும்.
இதையும் படிங்க : இனி ஃபேஸ்புக் மூலம் சைபர் ஸ்கேம் நடப்பதை சுலபமாக தடுக்கலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா!
ஓப்போ ரெனோ 15 சீரீஸ் – சிறப்பு அம்சங்கள்
OPPO Reno15 Series launched in India🇮🇳
OPPO Reno 15c
8GB+256GB: Rs 34,999OPPO Reno 15
8GB+256GB: Rs 45,999OPPO Reno 15 Pro
12GB+256GB: Rs 67,999OPPO Reno 15 Pro Mini
12GB+256GB: Rs 59,999Which one looks more interesting to you? pic.twitter.com/hrD8XK6MCp
— TrakinTech (@TrakinTech) January 8, 2026
வெனிலா ரெனோ 15 ஸ்மார்ட்போன் 6.95 இன்ச் 120Hz AMOLED ஸ்கீரினை கொண்டுள்ளது. ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 120Hz AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஓப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் 6.32 இன்ச் 120Hz AMOLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. மேலும், ரெனோ 15 சி ஸ்மார்ட்போன் 6.57 இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : டாப் லோட் vs ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷின்.. உங்கள் வீட்டிற்கு எது சிறந்தது?
ஓப்போ ரெனோ 15 சீரீஸ் – விலை பட்டியல்
8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஓப்போ ரெனோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.45,999 ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஓப்போ ரெனோ 15 சி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.34,999 ஆக உள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெனோ ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.59,999 ஆக உள்ளது.