AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் வரும் நோக்கியா 1100 – 4 வாரங்களுக்கு நிற்கும் சார்ஜ், டிஎஸ்எல்ஆர் தரத்தில் கேமரா! விலை எவ்வளவு?

Nokia 1100 : நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 1100 போனை புதிய அம்சங்களுடன் விரைவில் மீண்டும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த போனில் டிஎஸ்எல்ஆருக்கு நிகரான கேமரா வசதி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் பேட்டரி வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மீண்டும் வரும் நோக்கியா 1100 – 4 வாரங்களுக்கு நிற்கும் சார்ஜ், டிஎஸ்எல்ஆர் தரத்தில் கேமரா! விலை எவ்வளவு?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Jun 2025 18:54 PM IST

போன்களின் வடிவங்கள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன.  ஒருவருடன் பேச, மெசேஜ் அனுப்ப மட்டும் இருந்த செல்போன்கள் தற்போது உலகையே கைக்குள் கொண்டு வரும் ஸ்மார்ட்போன்களாக (Smartphones) மாறியிருக்கிறது. இத்தகைய ஸ்மார்ட்போன்களை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கியிருக்கிறார்கள்.  ஸ்மார்ட்போன்களில் எவ்வளவு வசதிகள் வந்தாலும், சிலர் இன்னும் எளிமையான  நம்பிக்கையான ஒரு மொபைலை அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் அனைவரும் பயன்படுத்திய செல்போன் என்றால் அது நோக்கியாவாகத்தான் (Nokia) இருக்கும். நோக்கியா என்ற நிறுவனம் தான் குறைந்த விலையில் அனைவருக்குமான செல்போன்களை வழங்கியது. இந்த நிலையில், ஏசியாநெட் நியூஸில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் நோக்கியா நிறுவனம் மிக அதிகம் விற்பனையான மாடலான Nokia 1100 என்ற மாடலை 2025 ஆம் ஆண்டு மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4ஜி மற்றும் டிஎஸ்எல்ஆர் தரத்துடன் கூடிய கேமரா

கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமான நோக்கியா 1100, நீண்ட பேட்டரி ஆயுள் கொண்டதாக வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது இந்த மாடல் புதிய வடிவில் மீண்டும் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 4ஜி இண்டர்நெட் வசதி, வைஃபை, Bluetooth 5.0, நியர் ஃபீல்டு கம்யூனிகேசன் போன்ற நவீன வசதிகளுடன் அறிமுகமாகவிருக்கிறது.  மேலும் டிஎஸ்எல்ஆர் தரத்தில் புகைப்படம் எடுக்கக்கூடிய கேமரா வசதியும் தரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போன்கள் செயலிகள் அதிகம் நிறைந்த ஸ்மார்ட்போன்களை அதிகம் விரும்பாத நபர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிகம் செயலிகள் இல்லாத, நல்ல கேமரா வசதியுடன் கூடிய போன் போதும் என நினைப்பவர்களுக்கு இந்த போன் நல்ல சாய்ஸ். மேலும் நீண்ட நேரம் செயலாற்றும் பேட்டரி வசதியால் விற்பனை பிரதிநிதிகளுக்கு இந்த போன் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பிளாஸ்டிக்களுக்கு பதிலாக விமான உற்பத்தியில் பயன்படும் அலுமினியம் போன்ற மெட்டீரியல்களும், செராமிக் கோட்டிங், சப்பையர் கிரிஸ்டல் நேவிகேஷன் பட்டன்கள் உள்ளிட்ட வசதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. கலர் விருப்பங்களில் மிட்நைட் பிளாக், ஆர்க்டிக் சில்வர், ஹெரிடேஜ் ப்ளூ என மூன்று அழகிய கலர்கள் உள்ளது.

ஒரே சார்ஜில் 4 வாரங்கள் வரும் பேட்டரி

இந்த போனில் 6000mAh பேட்டரி வசதி மூலம் வழக்கமான பயன்பாட்டில் ஒரே சார்ஜில் 4 வாரங்கள் பயன்படுத்தக்கூடியதாக கூறப்படுகிறது. யுஎஸ்பி மூலம் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு இதனை பவர் பேங்க்காகவும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.  மேலும் 2.8 இஞ்ச் திரையில் நேரடியாக சூரிய ஒளியிலும் தெளிவாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்க்கலாம்.

விலை எவ்வளவு?

இந்த போனின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.16,000 இருக்கும் என்று கூறப்படுகிறது.  சாதாரண கீப்பேட் போன்களைவிட விலை அதிகமாக இருந்தாலும், ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக அதற்கு நிகராக இருக்கும் போன்களை விரும்புபவர்களுக்கு இந்த போன் ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow Us