Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மே, 2025ல் ரூ.15,000க்கு குறைவான சிறந்த ஸ்மார்ட்போன்கள் – பட்ஜெட் விலையில் போன் தேடுபவர்களுக்கு நல்ல சாய்ஸ்

Best Smartphones Under 15,000 : தற்போது ஸ்மார்ட்போன்கள் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக விலை, செயல்திறன் என நம் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்யலாம். இந்த கட்டுரையில் மே, 2025ல் ரூ.15,000க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்களை பார்க்கலாம்.

மே, 2025ல் ரூ.15,000க்கு குறைவான சிறந்த ஸ்மார்ட்போன்கள் – பட்ஜெட் விலையில் போன் தேடுபவர்களுக்கு நல்ல சாய்ஸ்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 29 May 2025 20:19 PM

இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் (Smartphones) விலைக்கு ஏற்ப செயல்திறன், கேமரா வசதிகள் கொண்ட போன்கள் சந்தியில் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் என்பது தற்போது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகி விட்டது. நமது தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு விலைகளில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பாக ரூ.15,000க்குள் சிறந்த செயல்திறன், நீண்ட நேர பேட்டரி, நல்ல கேமரா (Camera) மற்றும் 5ஜி வசதி கொண்ட மாடல் போன்களை நம்மால் வாங்க முடியும். குறிப்பாக குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ். இந்த நிலையில் இந்தியா டிவி இணையதளத்தில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் மே 2025 நிலவரப்படி, வாடிக்கையாளர்களுக்கான நன்மை தரும் சில சிறந்த மாடல்களை இ்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.  இந்த பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் குறைந்த விலை, நல்ல செயல்திறன், சிறந்த கேமரா மற்றும் பேட்டரி வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள், கேமிங்கை விரும்புபவர்கள் ஆகியோர்களுக்கு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

ரூ.15,000க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

1. Redmi 13C 5G

இந்த போன் MediaTek Dimensity 6100+ பிராசசர் , 6.74-இஞ்ச் 90Hz டிஸ்ப்ளே, 6.74 இஞ்ச் 90எச்எஸ் டிஸ்பிளே, 50 எம்பி பிரதான கேமரா, 5000mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. மேலும் கேம் விளையாடுவதற்கும், 5ஜி சப்போர்ட்டிற்கும் ஏற்ற மாடலாகும். இதன் விலை ரூ. 12, 499 என கூறப்படுகிறது.

2. Realme Narzo N55

இந்த மாடல்  Helio G88 புராசஸர், 6.72-இஞ்ச் FHD+ 90Hz டிஸ்ப்ளே, 64எம்பி பிரதான கேமரா, 5000mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த போனில் சிறந்த டிஸ்ப்ளே மற்றும் நல்ல கேமரா வசதிகளைக் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 10,999க்கு கிடைக்கும்.

3. iQOO Z6 Lite 5G

இந்த மாடல் Snapdragon 4 Gen 1 புராசசர், 120Hz ரீஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 50MP கேமரா, 5000mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இந்த போனின் 120Hz டிஸ்ப்ளே மற்றும் 5G உண்டு என்பது இதன் முக்கிய ஹைலைட். சந்தையில் இதன் விலை ரூ.13,999 என்று கூறப்படுகிறது.

4. Samsung Galaxy M04

இந்த மாடல் MediaTek Helio P35 புராசசர், 13MP + 2MP டூயல் கேமரா, 5000mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். மேலும் Samsung One UI பயன்படுத்த விரும்புவோருக்கு இந்த போன் சிறந்த தேர்வாகும். இதன் விலை சந்தையில் ரூ. 7,999க்கு கிடைக்கிறது.

5. Lava Blaze 5G (2024)

இந்த மாடலில் Dimensity 6020 புராசஸர், 6.5-இஞ்ச் HD+ டிஸ்ப்ளே, 50 எம்பி டூயல் கேமரா, 5000mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இந்தியாவின் தயாரிப்பு, உறுதியான டிஸ்பிளே 5ஜி வசதி ஆகியவை இதன் கூடுதல் ஹைலைட். இதன் விலை ரூ. 10,999 என கூறப்படுகிறது.

6. Motorola G13

இந்த போனில் Helio G85 புராசசர், 6.5-இஞ்ச் 90Hz டிஸ்ப்ளே, 6.5-இஞ்ச் 90Hz டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். Stock Android விரும்புவோருக்கான சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இதன் விலை ரூ. 8, 999 என கூறப்படுகிறது.

7. Infinix Zero 5G 2023

இந்த போனில் Dimensity 920 புராசஸர், 50MP டிரிபிள் கேமரா, 5000mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். மேலும் நல்ல செயல் திறன், ப்ரீமியம் அம்சங்களை விரும்புவோரருக்கு இந்த போன் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இதன் விலை ரூ.14, 999 க்கு கிடைக்கிறது.

 

நகைக் கடன் விதிகள் தளர்த்தப்படுமா? ஆர்பிஐக்கு பரிந்துரை
நகைக் கடன் விதிகள் தளர்த்தப்படுமா? ஆர்பிஐக்கு பரிந்துரை...
தமிழகத்தில் 4 புதிய கல்லூரிகள்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் 4 புதிய கல்லூரிகள்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...
90ஸ் கிட்ஸின் சூப் சாங்... காதல் கசக்குதையா உருவான கதை தெரியுமா?
90ஸ் கிட்ஸின் சூப் சாங்... காதல் கசக்குதையா உருவான கதை தெரியுமா?...
பாகிஸ்தானில் 90 நாட்கள்.. உளவு பார்த்த நபர் அதிரடி கைது!
பாகிஸ்தானில் 90 நாட்கள்.. உளவு பார்த்த நபர் அதிரடி கைது!...
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!...
எலிமினேட்டரில் வெளியேறும் அணி எது..? மும்பை - குஜராத் இன்று மோதல்
எலிமினேட்டரில் வெளியேறும் அணி எது..? மும்பை - குஜராத் இன்று மோதல்...
சூடாகும் உலகம்.. நிலச்சரிவில் புதைந்த சுவிட்சர்லாந்து கிராமம்!
சூடாகும் உலகம்.. நிலச்சரிவில் புதைந்த சுவிட்சர்லாந்து கிராமம்!...
மாணவர்களுக்கு விருது விழா.. பரிசுகளை வழங்கும் விஜய்!
மாணவர்களுக்கு விருது விழா.. பரிசுகளை வழங்கும் விஜய்!...
பள்ளிகளில் செவ்வாய் கிழமைகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு!
பள்ளிகளில் செவ்வாய் கிழமைகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு!...
சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா?
சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா?...
8 பேரை பலிவாங்கிய பல் சிகிச்சை.. 2 வருடம் கழித்து வெளியான ஷாக்!
8 பேரை பலிவாங்கிய பல் சிகிச்சை.. 2 வருடம் கழித்து வெளியான ஷாக்!...