Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Iqoo 10 Pro Plus : ஐகூ 10 ப்ரோ பிளஸ் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

iQOO 10 Pro Plus introduced in China | விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஐகூ தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன, ஐகூ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Iqoo 10 Pro Plus : ஐகூ 10 ப்ரோ பிளஸ் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஐகூ 10 ப்ரோ பிளஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 May 2025 23:52 PM

விவோ (Vivo) நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூ (Iqoo) அவ்வப்போது பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஐகூ 10 ப்ரோ பிளஸ் (Iqoo 10 Pro Plus) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில், சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனாக இது கருதப்படுகிறது. இந்த நிலையில், ஐகூ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, அது இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீனாவில் அறிமுகமான ஐகூ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்

ஐகூ 10 ப்ரோ பிளஸ் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 எலைட் சிப்செட் அம்சத்தில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2k ரெசல்யூஷன், 144Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் கூடிய AMLOED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் தண்ணீர் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 50MP இரட்டை பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 120 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் அம்சம் மற்றும் 6800 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஐகூ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்

ஐகூ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஐகூ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB மற்றும் 16GB+1TB ஆகிய ஸ்டோரேஜ் அளவுகளை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 12GB+512GB கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.41,000-க்கும், 16GB+256GB கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.39,000-க்கும், 16GB+512GB கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.43,000-க்கும், 16GB+1TB கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.50,000-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் மே 26, 2025 அன்று அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.