கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு… இந்தியாவில் இணைய சேவை பாதிக்கும் அபாயம்
Telecom Industry Alert : எல்பிஜி எரிவாயு விநியோகம் தடைபட்டால் இந்தியாவில் இணைய சேவைகள் பாதிக்கப்படும் என டெலிகாம் நெட்வொர்க் டவர் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மொபைல் நெட்வொர்க் செயல்பாடுகளும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
எல்பிஜி எரிவாயு விநியோகம் தடைபட்டால் இந்தியாவில் இணைய சேவைகள் பாதிக்கப்படும் என டெலிகாம் நெட்வொர்க் டவர் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு நிறுவனங்களின் சங்கமான டிஜிட்டல் இன்ஃப்ராஸ்டிரக்சர் புரவைடர்ஸ் அசோசியேஷன் கவலை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவின் பேரில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாங்கும் எரிவாயு தற்போது வீடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்ப்டடுள்ளது. இதன் காரணமாக டெலிகாம் நெட்வொர்க் டவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த எல்பிஜி விநியோகம் கடந்த மார்ச் 5, 2026 அன்று முதல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
டவர் உற்பத்திக்கு சிக்கல்
நெட்வொர்க் டவர் தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் கல்னைசிங் செயல்முறைக்கு அதிக வெப்பம் தயாரிக்கப்படுகிறது இந்த செயல்முறைகள் பெரும்பாலும் எல்பிஜி அல்லது எல்என்ஜி எரிவாயுவை பயன்படுத்தி வருகின்றன. எல்பிஜி எரிவாயு விநியோகம் தடைபட்டால் டவர் உற்பத்தியில் பெரிய சிக்கல் ஏற்படும் என டிஐபிஏ தெரிவித்துள்ளது. சில நிறுவனங்கள் குறைவான எல்பிஜி பயன்பாட்டுடன் தற்போது உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் ஜிங்க் உற்பத்தி நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஆலைகள் மூடப்பட்டால் மீண்டும் துவங்குவதற்கு அதிக காலம் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : EMI-ல் ஐபோன் வாங்குவது சிறப்பானதா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?
நெட்வொர்க் டவர் உற்பத்தி குறைந்தால், நாட்டில் புதிய டவர் அமைக்கும் பணிகள் தாமதமாகும். இதனால் மொபைல் நெட்வொர்க் விரிவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இன்னும் முழுமையான நெட்வொர்க் சேவை கிடைக்காத பகுதிகளிலும் அதிக நெட்வொர்க் தேவையுள்ள பகுதிகளிலும் இந்த பிரச்னை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என டிஐபிஏ தொலைத்தொடர்பு செயலாளர் அமித் அகர்வாலுக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த மார்ச் 5, 2026 அன்று வெளியிடப்பட்ட உத்தரவில் இருந்து நெட்வொர்க் டவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து எல்பிஜி மற்றும் எல்என்ஜி எரிவாயு விநியோகத்தை மீண்டும் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : டிவி ரிமோட்டில் உள்ள மஞ்சள், பச்சை, நீலம் பட்டன்கள் எதற்காக தெரியுமா? ஆச்சரிய தகவல்
மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் நேரங்களில் மொபைல் டவர்கள் ஜெனரேட்டர்கள் மூலம் இயங்குகின்றன. இந்த நிலையில் எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மொபைல் நெட்வொர்க் செயல்பாடுகளும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் இணைய சேவைகள் தற்போது நாட்டின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. 5ஜி சேவைகள், அவசர மற்றும் பேரிடர் மீட்பு பணிகள், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய வேசைகளும் மொபைல் நெட்வொர்க்கை நம்பியுள்ளன. அவை தடைபட்டால் நாட்டின் ஒட்டுமொத்த செயல்பாடும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.