Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

iQOO 15 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான iQOO 15 ஸ்மார்ட்போன்!

iQOO 15 Smartphone Introduced in China | iQOO நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் iQOO 15 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

iQOO 15 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான iQOO 15 ஸ்மார்ட்போன்!
iQOO ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Oct 2025 22:21 PM IST

iQOO நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன iQOO 15 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 Chipset) அம்சத்தை கொண்ட முதல் பிரீமியம் ஸ்மார்ட்போனாக இது உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல அட்டகாசமான அம்சங்களி கொண்டதாக உள்ளது. சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீனாவில் அறிமுகமானது iQOO 15 ஸ்மார்ட்போன்

  • இந்த ஸ்மார்ட்போனில் 6.85 இன்ச் 1440p AMOLED LTPO டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்  அம்சத்தை கொண்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் வசதியை கொண்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் 100 வாட்ஸ் வையர்டு மற்றும் 40 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : தீபாவளி சேலில் அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் புளூடூத் ஸ்பீக்கர்கள்.. பட்டியல் இதோ!

iQOO 15 ஸ்மார்ட்போன் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

  • 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேக் கொண்ட iQOO 15 ஸ்மார்ட்போன் 4,199 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.52,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO 15 ஸ்மார்ட்போன் 4,699 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.58,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேக் கொண்ட கொண்ட iQOO 15 ஸ்மார்ட்போன் 4,499 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.55,650-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO 15 ஸ்மார்ட்போன் 4,999 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.62,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO 15 ஸ்மார்ட்போன் 5,999 யென்னுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.68,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.