129 பாதுகாப்பு குறைபாடுகள் – ஆண்ட்ராய்ட் அப்டேட்டை உடனே பண்ணுங்க – பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை

Android Update : ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு கூகுள் நிறுவனம் முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி மார்ச், 2026 மாதத்திற்கான புதிய ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அப்டேட்டை உடனடியாக மேற்கொள்ளுமாறு பயனர்களுக்கு கூகுள் அறிவுறுத்தியுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

129 பாதுகாப்பு குறைபாடுகள்  - ஆண்ட்ராய்ட் அப்டேட்டை உடனே பண்ணுங்க - பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை

மாதிரி புகைப்படம்

Published: 

04 Mar 2026 16:21 PM

 IST

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு கூகுள் நிறுவனம் முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச், 2026 மாதத்திற்கான புதிய ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த அப்டேட் மூலம் 129 பாதுகாப்பு குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஆண்ட்ராய்டு போன்களில் பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், இந்த அப்டேட் பயனர்கள் தங்கள் போன்களை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.

அதன் படி கூகுள் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஆண்ட்ராய்டு போன்களில் இருந்த இந்த பாதுகாப்பு குறைபாடுகள் மூலம் ஹேக்கர்கள் சாதனங்களை தாக்கும் அபாயம் இருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள மார்ச் 2026 பாதுகாப்பு அப்டேட் மூலம் அந்த 129 பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சாதன பாதுகாப்பு மேம்படுத்தப்படுமென கூறப்படுகிறது.

இதையும் படிக்க : தண்ணீரை உறிஞ்சும் ஏஐ.. சாட்ஜிபிடியில் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் இருக்கும் ஆபத்து!

அப்டேட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

மேலும், இந்த பாதுகாப்பு குறைபாடுகளில் சில ஜீரோ டே வல்னெரபிலிட்டீஸ் எனப்படும் மிகவும் ஆபத்தான பிரச்னைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வகை குறைபாடுகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் அறிகுறிகளும் இல்லாமல் ஹேக்கர்கள் நம் போன்களில் உள்ள டேட்டாக்களை திருட முடியும். அதனால் ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த அப்டேட்டை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூகுள் அறிவுறுத்தியுள்ளது.

இந்த பிரச்னைகளில் முக்கியமான ஒன்று Qualcomm என்ற சிப் செட் தொடர்புடைய பாதுகாப்பு குறைபாடு முக்கியமானதாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய அபாய நிலை கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறைபாடு காரணமாக ஹேக்கர்கள், நீண்ட தொலைவில் இருந்தே நம் போன்களை ஹேக் செய்து தகவல்களை திருட முடியும். மேலும் சில நேரங்களில் போன்களின் செயல்பாட்டை பாதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையை கூகுள் மற்றும் Qualcomm நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

இதையும் படிக்க : ஆக்டிவ் சிம் இல்லை என்றால் வாட்ஸ்அப் இயங்காது.. இன்று முதல் அதிரடி நடவடிக்கை!

மேலும் அதுமட்டுமில்லாமல் ஆர்ம், மீடியாடெக் மற்றும் யூனிசோக் போன்ற சிப் செட்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களிலும் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக விலை குறைந்த ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்னைகள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அப்டேட்டை பெற ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் செட்டிங்ஸ் சென்று சிஸ்டம் அப்டேட் என்பதை தேர்வு செய்து புதிய அப்டேட் இருக்கிறதா என சரி பார்க்கலாம். அப்படி அப்டேட் வழங்கப்பட்டிருந்தால் அதனை டவுன்லோடு செய்து அப்டேட் செய்து உடனே அப்டேட் வழங்கவும்.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ