AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏஐ மையப்படுத்தி அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்.. அட இத்தன சிறப்பு அம்சங்களா?

Facebook Introduced New Features | உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பேஸ்புக் செயலியை பயன்படுத்தும் நிலையில், அந்த நிறுவனம் செயற்கை நுண்ணறி அம்சத்தை மையப்படுத்திய சில அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏஐ மையப்படுத்தி அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்.. அட இத்தன சிறப்பு அம்சங்களா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Feb 2026 19:37 PM IST

உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தும் செயல்களில் ஒன்றாக மெட்டா (Meta) நிறுவனத்தின் பேஸ்புக் (Facebook) உள்ளது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதன் காரணமாக பலரும் இந்த செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் தேவைக்கு ஏற்ப பேஸ்புக் செயலியில் அவ்வப்போது சில அட்டகாசமான அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் உதவியுடன் சில அட்டகாசமான அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு அம்சங்களை அறிமுகம் செய்த பேஸ்புக்

இளைஞய சமூகத்தினர் பயன்படுத்துவதற்கு ஏற்ற செயலியாக மெட்டா, பேஸ்புக்கை மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை மையப்படுத்தி சில அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, அனிமேட்டட் முகப்பு புகைப்படம் (Animated Profile Picture), போட்டோ ரீஸ்டைலிங் (Photo Restyling), மற்றும் அனிமேட்டட் பேக்ரவுண்ட் (Animated Background) ஆகிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : இனி WhatsApp Web-லும் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்.. வந்தது அசத்தல் அம்சம்!

பேஸ்புக்கின் புதிய அம்சங்கள் – இத்தனை சிறப்புகளா?

பேஸ்புக்கின் இந்த புதிய அனிமேட்டட் முகப்பு புகைப்பட அம்சத்தில் புகைப்படங்களை நகர்த்த முடியும். உதாரணமாக, புகைப்படங்களை அலைகளை போல அசைய செய்வது, அவற்றின் மீது இதய வடிவம் வருவது மற்றும் தலையில் தொப்பி அணிவது, கண்ணாடி அணிவது ஆகியவற்றை இந்த அம்சத்தின் மூலம் செய்ய முடியும். இந்த அம்சத்தை முறையாக பயன்படுத்த தனிநபர் அடங்கிய தெளிவான புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும் என்று பேஸ்புக் கூறியுள்ளது.

இதையும் படிங்க : இரவில் வைஃபை, மொபைல் நெட்வொர்க்கை On-ல் வைத்திருப்பது ஆபத்தானதா?.. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான மெமரீஸ்

முன்பெல்லாம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக் ஸ்டோரியில் வைத்தால் அவை 24 மணி நேரத்திற்குள்ளாக காணாமல் போய்விடும். இந்த நிலையில், தான் பேஸ்புக் இந்த அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது போட்டோ மற்றும் வீடியோக்கள் ஒரு ஆண்டுக்கு பிறகு மெமரீஸில் தோன்றும். அதனை மெட்டா ஏஐ உடன் ரீஸ்டைல் செய்யும் அம்சத்தையும் பேஸ்புக் வழங்கியுள்ளது.

அனிமேட்டட் பேக்ரவுண்ட் அம்சம்

எழுத்துக்கள் அடங்கிய ஸ்டோரிக்களை மெருகூட்டும் வகையில், அவற்றுக்கு பேக் கிரவுண்ட் செட் செய்யும் அம்சத்தை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பிடித்த பேக்ரவுண்டில் ஸ்டோரி போட முடியும்.