AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகளைக் கொன்ற இளைஞர் ஜாமீனில் விடுதலை.. 5 மாதம் காத்திருந்து பழிதீர்த்த தந்தை.. தஞ்சையில் பயங்கரம்!!

இதைத் தொடர்ந்து காவியாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்த அவரது பெற்றோர் உறவில் ஒரு மாப்பிள்ளை பார்த்து கடந்த நவம்பர் மாதம் காவியாவுக்கும், அவரது உறவினருக்கும் நிச்சயதார்த்தத்தையும் நடத்தினர். திருமண நிச்சயதார்த்தம் நடந்ததற்கு பின்னர் கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக காவியா ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார்.

மகளைக் கொன்ற இளைஞர் ஜாமீனில் விடுதலை.. 5 மாதம் காத்திருந்து பழிதீர்த்த தந்தை.. தஞ்சையில் பயங்கரம்!!
அஜித்குமார், காவியா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Apr 2026 13:34 PM IST

தஞ்சை அருகே மகளை கொன்ற வாலிபர் ஜாமீனில் வெளியே வந்ததை அறிந்து உறவினர்களுடன் சேர்ந்து தந்தை பழி தீர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையை அடுத்த பிராந்தை கீழத்தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (53). திமுகவைச் சேர்ந்த இவர் ஆலங்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார். இவருடைய மகள் காவியா (26). இவர், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும்போது, மேலகணக்குடியைச் சேர்ந்த பெயிண்டரான அஜித்குமார் என்பவர் காவியாவிடம், நான் உன்னை காதலிக்கிறேன், உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என பலமுறை வற்புறுத்தி உள்ளார்.

இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?

திருமணம் செய்ய மறுப்பு:

அதற்கு காவியா, என்னைப்போல் படித்தவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். பெயிண்டர் வேலை பார்க்கும் உன்னை என்னால் காதலிக்கவோ, திருமணம் செய்து கொள்ளவோ முடியாது என கறாராக கூறி உள்ளார். மேலும் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடமும் காவியா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையை ஊர் பெரியவர்களிடம் தெரிவித்து, அஜித்குமாரை கண்டிக்குமாறு காவியாவின் தந்தை புண்ணியமூர்த்தி கூறினார். இதையடுத்து ஊர் பெரியவர்களும் அஜித்குமாரை கண்டித்ததுடன், இனிமேல் காவியாவிடம் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என கூறினர்.

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்:

இதைத் தொடர்ந்து காவியாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்த அவரது பெற்றோர் உறவில் ஒரு மாப்பிள்ளை பார்த்து கடந்த நவம்பர் மாதம் காவியாவுக்கும், அவரது உறவினருக்கும் நிச்சயதார்த்தத்தையும் நடத்தினர். திருமண நிச்சயதார்த்தம் நடந்ததற்கு பின்னர் கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக காவியா ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார்.

அரிவாளால் வெட்டிக் கொலை:

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில்-ஆலங்குடி ரோட்டில் அவர் சென்றபோது காவியா ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது அஜித்குமார் தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை மோதினார். இதில் நிலைதடுமாறி காவியா ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். அந்த சமயத்தில் அஜித்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவியாவை வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவானார்.

பழிக்குப்பழி தீர்க்க திட்டம்:

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் அஜித்குமார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து தனது தந்தை ஊரில் இருந்தார். இதை அறிந்த காவியாவின் தந்தை புண்ணியமூர்த்தி, தனது மகளை கொலை செய்த அஜித்குமாரை பழிதீர்க்க திட்டமிட்டார்.

இந்த நிலையில் அஜித்குமார் சொந்த ஊருக்கு வந்ததை அறிந்த புண்ணியமூர்த்தி தனது உறவினர்களான ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (22), ராமலிங்கம் (30), புலிவஞ்சந்தம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா (55) ஆகியோருடன் சேர்ந்து நேற்று அதிகாலையில் அஜித்குமார் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அஜித்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதில் அந்த இடத்திலேயே அஜித்குமார் பிணமானார்.

இதையும் படிக்க: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு.. மத்திய மின்சார அமைச்சகம் எச்சரிக்கை!!

போலீசில் சரண்:

அஜித்குமாரை கொலை செய்த புண்ணியமூர்த்தி, லோகேஷ், ராமலிங்கம், கருப்பையா ஆகிய 4 பேரும் நேராக அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தனர். பின்னர் சரண் அடைந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகளை கொலை செய்த வாலிபரை பழிதீர்க்க 5 மாதங்கள் காத்திருந்த தந்தை உறவினர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பயங்கர சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us