Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜய்க்கு உருக்கமான கடிதம்.. கந்து வட்டி கொடுமையால்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Puducherry Youth Suicide : புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்ககு கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார். உயிரிழந்தவர் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார்.

விஜய்க்கு உருக்கமான கடிதம்.. கந்து வட்டி கொடுமையால்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jul 2025 17:23 PM

புதுச்சேரி, ஜூலை 03 : புதுச்சேரியில் கந்து வட்டி கொமை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். புதுச்சேரி மாநிலம் நெல்லிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரமன் (34). இவருடைய மனைவி மேரி. இந்த தம்பதிக்க இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். விக்ரமன் ஓட்டுநர் வேலை பார்த்து வந்தார். இவர் தமிழக வெற்றிக் கழக உறுப்பினராக இருந்தார். இவருக்கு கடன் பிரச்னை இருப்பதாக தெரிகிறது. கடன் பிரச்னையால் தனது சொந்த வீட்டையும் காலி செய்து விட்டார். இதனை அடுத்து, நெல்லிதோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசிந்து வந்துள்ளார்.

கந்து வட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை

இந்த நிலையில், 2025 ஜூலை 2ஆம் தேதியான நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அவரது வீட்டில் யாரும் இல்லை. அந்த நேரத்தில், வட்டி கேட்டு சிலர் விக்ரமனை தொடர்பு கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து, விக்ரமன் மின்விசியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெளியே சென்ற மனைவி மேரி வீட்டிற்கு வந்தபோது, விக்ரமன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்ரமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், விக்ரமன் வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

விஜய்க்கு உருக்கமான கடிதம்

அக்கடிதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனசேகர் என்பவரிடம் ரூ.3.80 லட்சத்திற்கு 10 பைசா வீதத்திற்கு வாங்கியதாகவும், தனக்கு விபத்து ஏற்பட்டதால் வட்டி கட்ட முடியாமல் மூன்று மாதங்கள் தேதி தவறி செலுத்தி வருவதாக விக்ரமன் கூறியுள்ளார். மேலும், வட்டி தாமதமாக செலுத்துவதால், தனசேகரன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியும், தன்னை துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என விக்ரமன் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், செல்வம் என்பவரிடம் ரூ.50,000 வாங்கியதாகவும், அதற்கு ரூ.21,000 வட்டியுடன் சேர்த்து அசல் பணத்தை கொடுத்தால் ரூ.1.50 லட்சம் தருவதாக கூறியிருக்கிறார். இதானல், தனது மினி வண்டியை அடமானம் வைத்து செல்வத்திடம் கொடுத்தாகவும், அதன் பிறகு தனக்கு பதிலளிக்கவில்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மன உளைச்சலில் இருந்த நான், தற்கொலை செய்து கொண்டேன் என கூறினார்.  மேலும், கந்து வட்டி விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், Anna please help in my family எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)