Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

”எங்க வீட்டுப்பையன் விஜய்” மாறும் கூட்டணி கணக்கு.. பிரேமலதா விஜயகாந்த் பளீச்

DMDK TVK Alliance : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எங்க வீட்டுப்பிள்ளை என்றும் தேமுதிகவுடன் தவெக கூட்டணியா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், தேமுதிக தனித்து போட்டியா என்பது காலம் தான் பதில் சொல்லும் எனவும் கூறியிருக்கிறார்.

”எங்க வீட்டுப்பையன் விஜய்”  மாறும் கூட்டணி கணக்கு..  பிரேமலதா விஜயகாந்த் பளீச்
பிரேமலதா விஜயகாந்த் - விஜய்Image Source: X/PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Jun 2025 15:56 PM

சென்னை,  ஜூன் 11 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (tvk chief vijay) எங்க வீட்டுப்பிள்ளை என்றும் தேமுதிகவுடன் தவெக கூட்டணியா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (premalatha vijayakanth) தெரிவித்துள்ளார். மேலும், தேமுதிக தனித்து போட்டியா என்பது காலம் தான் பதில் சொல்லும் எனவும் கூறியிருக்கிறார். தொடர்ந்து நானும் விஜயபிரபாகரனும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். தேமுதிகவின் தலைமை கழகத்தில் மண்டல,மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாளை இரண்டு மண்டலங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சகோதரர் செல்வபெருந்தவை எப்போதும் கேப்டன் மீது மரியாதை கொண்டவர். அதனால் திமுகவுடன் கூட்டணிக்கு வந்தால் வரவேற்பேன் என சொல்லி இருக்கிறார். ஜனவரி மாதம் எந்த தொகுதி, யார் வேட்பாளர், எத்தனை தொகுதி என்பது தேமுதிக சார்பில் அறிவிக்கப்படும்.

தேமுதிக தணித்து போட்டியா?

இந்த நிமிடமே யாருடன் கூட்டணி என்று சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தேமுதிகவின் நிலைப்பாட்டை அறிவிக்க டைம் வேண்டும். அதிமுக அவர்கள் கருத்தை சொல்லி இருக்கிறார்கள் அதை நாங்கள் வரவேற்கிறோம்.

என்னுடைய வார்த்தைதான் முக்கியம் ஒரு முறை வார்த்தை குடுத்தால் அதை மீற மாட்டோம் என அண்ணன் எடப்பாடி சொன்னார். மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதித் தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் உள்ளோம். தமிழகத்தில் தேர்தல் களத்தில் தனித்துப்போட்டி காண முடியும் என நிருப்பித்தவர் கேப்டன்.

தேமுதிக தனித்து போட்டியிட அஞ்சாது. இதற்கு முன்னர் தனித்து போட்டியிட்டு எங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் நாங்கள். அதனால், நாங்கள் அனைத்திற்கும் தயாராக இருக்கிறோம். தனித்துபோட்டியா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்

கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு

அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக கேபி முனுசாமி கூறினார். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர் கட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதாவது, “2026 சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும். கிளைக்கழகம் வரை நேரடியாக களத்திற்கு சென்று அனைவரும் பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.

மேலும், விஜய் குறித்து பேசிய பிரேமலதா, “விஜய் எங்கள் வீட்டுப்பையன். சாலிகிராமத்தில் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் அவர்கள் வீடு தான். எஸ்.வி. சந்திரசேகருடன் 17 படங்களில் கேப்டன் நடித்திருக்கிறார். இப்போது வேண்டுமானாலும் விஜய் அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால், சிறு வயதில் இருந்தே விஜய் எங்கள் வீட்டுப்பையன். இந்த கேள்வியை நீங்கள் விஜயிடம் தான் கேட்க வேண்டும். தேமுதிகவுடன் அரசியல் நிலைபாடு என்னவென்று விஜயிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!...
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்...