AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மின் துறையில் எவ்வளவு நஷ்டம்? நிதி நிலை என்ன? காலை 10.30 மணிக்கு வெளியாகும் வெள்ளை அறிக்கை..

இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு, நிதி, மனிதவளம், தளவாடப் பொருட்கள், நடைபெற்று வரும் திட்டப் பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இதனை மின்துறை அமைச்சர் வெளியிடுகிறார்.

மின் துறையில் எவ்வளவு நஷ்டம்? நிதி நிலை என்ன? காலை 10.30 மணிக்கு வெளியாகும் வெள்ளை அறிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Jun 2026 07:04 AM IST

ஜூன் 25, 2026: தமிழகத்தில் மின்துறை சார்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருந்த சூழலில், இன்று காலை 10.30 மணிக்கு அந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழ்நாடு மின்வாரியத்தின் நிதிநிலை மற்றும் செலவினங்கள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிடும் வெள்ளை அறிக்கை:

அதன்படி, இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு, நிதி, மனிதவளம், தளவாடப் பொருட்கள், நடைபெற்று வரும் திட்டப் பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இதனை மின்துறை அமைச்சர் வெளியிடுகிறார்.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றவுடன், தமிழகத்தின் நிதிநிலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மின்துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மின்துறைக்கான தனி வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.

காரசாரமான விவாதம் – செந்தில் பாலாஜி vs சி.டி.ஆர் நிர்மல் குமார்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தற்போதைய மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இடையே நீண்ட விவாதம் நடைபெற்றது.

மேலும் படிக்க: சீமானிடம் தோளில் கைபோட்டு, சீரியஸாக டிஸ்கஸ் செய்த மு.க.ஸ்டாலின்.. ஒரே சோபாவில் 3 ஜாம்பவான்கள்..

அப்போது பேசிய செந்தில் பாலாஜி, “கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டதில் பெரும்பாலானவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மின் தேவையை அதிகரிக்கும் நோக்கில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு, மின்துறை அதிகாரிகளுடன் போதிய அளவில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தவில்லை என துறையில் பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விட, தற்போதுள்ள திட்டங்களை ஆய்வு செய்து அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “ஓரிரு நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதன் பின்னர் விரிவாக விவாதிக்கலாம்” என கூறியிருந்தார்.

மின்வெட்டுக்கு தீர்வு கிடைக்குமா?

இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்வெட்டுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருந்த நிலையில், அவை குறித்த விளக்கங்களும் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us