Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு எப்போது?.. எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியானது அறிவிப்பு!!

Half Yearly Exam: அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு சரியாக 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டாலும், மழையை பொறுத்து அந்ததந்த மாவட்டங்களுக்கு தேர்வு தேதிகள் மாறுபடலாம். ஏனெனில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் கனமழை பொழிவு அதிகளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு எப்போது?.. எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியானது அறிவிப்பு!!
கோப்புப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Nov 2025 17:35 PM IST

சென்னை, நவம்பர் 16: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த எதிர்பார்ப்பு மாணவர்களிடம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ள உள்ள நிலையில், அரையாண்டு தேர்வு என்பது அதற்கு முந்தைய முக்கியமானத் தேர்வாக பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கப்படும். அந்தவகையில், தமிழக பள்ளிக் கல்வி துறையின் திருத்தப்பட்ட நாள்காட்டியின்படி, இந்தாண்டு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க: நவ. 24 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்..

அரையாண்டுத் தேர்வு எப்போது?:

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு டிச. 10-ம் தேதியும், 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு டிச.15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ஆம் வகுப்புக்கு தேர்வு:

அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிசம்பர் 15-ல் தொடங்கி 23-ம் தேதி வரை முடிவடையும். தேர்வுகள் காலை, மதியம்  வேளைகளில் நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க: கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து; ஒருவர் பலி..15 பேரின் நிலை என்ன?

பள்ளிகளுக்கு விடுமுறை எப்போது?:

தொடர்ந்து அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 9 நாட்கள் விடுமுறை இருக்கும் எனத் தெரிகிறது.

ன்று முதல் மூன்றாம் பருவம் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கும் அன்று மாணவர்களுக்கு மூன்றாம் பருவம் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.