AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் தொடர உறுதுணையாக இருப்போம் – திருமாவளவன் திட்டவட்டம்…

அமைச்சர் சரத்குமார் மீது முன்வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக, "ஆதாரமின்றி எந்தக் கருத்தையும் கூற முடியாது. ஆனால், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. எந்தக் கட்சி என்ற விவாதத்தை விட, இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதே முக்கியம்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் தொடர உறுதுணையாக இருப்போம் – திருமாவளவன் திட்டவட்டம்…
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jun 2026 12:22 PM IST

ஜூன் 30, 2026: மதுரை மாவட்டம் மேலூர், மேலவளவு முருகேசன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், மதுரை சின்ன சிக்கிகுளத்தில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.  முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “3 மாதங்களில் தேர்தல் வரலாம்” என்று கூறியிருந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் எந்தக் கோணத்தில் அந்தக் கருத்தை கூறினார் என்பது தெரியவில்லை.

தவெக அரசு 5 ஆண்டுகள் தொடர உறுதுணையாக இருப்போம்:

எங்களைப் பொறுத்தவரை, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகள் தங்களது வாக்குறுதியை மீற வாய்ப்பில்லை. விசிக, இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை அளித்த ஆதரவை உறுதியாகத் தொடரும். காங்கிரஸ் கட்சியும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்னிட்டு கூட்டணி உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு முழு 5 ஆண்டுகளும் எந்த இடையூறும் இன்றி செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் புதிய கூட்டணி அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “அங்கு சென்ற பிறகுதான் என்ன விவாதிக்கப்படுகிறது என்பது தெரியும். எங்களுக்கு தேநீர் விருந்துக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வனும் பங்கேற்கிறோம்” என்றார்.

மேலும் படிக்க: நள்ளிரவில் போதையில் தள்ளாடிய அரசு பேருந்து ஓட்டுநர்; 55 பயணிகளின் உயிருடன் விளையாடிய பகீர் சம்பவம்

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – விளக்கம் அளிக்க வேண்டும்:

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருவது குறித்து, “ராஜினாமா செய்பவர்கள் ஏன் அந்த முடிவை எடுத்தனர், அதிமுகவில் என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டும். யூகங்களின் அடிப்படையில் விவாதங்களை வேறு திசைக்கு திருப்புவது சரியல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியிருப்பது அதிமுகவுக்குள் உள்ள முக்கியமான பிரச்சினையை வெளிப்படுத்துகிறது. அதற்கான விளக்கத்தை அதிமுகதான் மக்களிடம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பைத் தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்ற அவர், “மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியை பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. முதலமைச்சர் சாதி அடையாளங்களை ஊக்குவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதை அவரது பேச்சின் மூலம் உணர முடிகிறது. அந்த நிலைப்பாடு தொடர வேண்டும்” என்றார்.

போதப்பொருள் புழக்கம் அதிகரிப்பு:

அமைச்சர் சரத்குமார் மீது முன்வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக, “ஆதாரமின்றி எந்தக் கருத்தையும் கூற முடியாது. ஆனால், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. எந்தக் கட்சி என்ற விவாதத்தை விட, இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதே முக்கியம்” என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் துறை மாற்றம் குறித்த கேள்விக்கு, “அது குறித்து எனக்கு தகவல் இல்லை” என தெரிவித்தார்.

Follow Us