AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேனியில் அதிர்ச்சி.. சாலையோர மழைநீர் வடிகால் தொட்டிக்குள் விழுந்து இருவர் பலி!

Theni Accident : தேனி மாவட்டத்தில் சாலையோரத்தில் இருந்த மழைநீர் வடிகால் தொட்டிக்குள் விழுந்து இளைஞர்கள் இரண்டு பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்போது, நிலைத்தடுமாறி மழைநீர் வடிகால் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

தேனியில் அதிர்ச்சி.. சாலையோர மழைநீர் வடிகால் தொட்டிக்குள் விழுந்து இருவர் பலி!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 May 2025 09:50 AM IST

தேனி, மே 27 : தேனி மாவட்டத்தில் சாலையோரத்தில் இருந்த மழைநீர் வடிகால் தொட்டியில் விழுந்து 2 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திடீரென நிலைத்தடுமாறி, மழைநீர் வடிகால் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து,  தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை,  தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இந்த சூழலில், தேனியில் கோர விபத்து நடந்துள்ளது.  அதாவது,  சாலையோரத்தில் இருந்த மழைநீர் தொட்டியில் விழுந்து 2 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (19) மற்றும் பாண்டி (25).

மழைநீர் வடிகாலில் விழுந்து 2 பேர் பலி

இவர்கள் இருவரும் 2025 மே 26ஆம் தேதியான நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் போடிநாயக்கனூர் குரங்கனி பகுதியில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றுக்கின்றனர்.

அப்போது, போடிநாயக்கனூர் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் திடீரென நிலைத்தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மழைநீர்  வடிகால் தொட்டிக்குள் விழுந்திருக்கிறது. இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த, அக்கம் பக்கத்தினர்  உடனே அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள்,  இருவரும் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனை அடுத்து, இருவரின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  திறந்த நிலையிலும், எச்சரிக்கை பலகை, தடுப்பு கம்பிகள் எதுவும் அமைக்கப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு

இதனால், மழைநீர் வடிகாலில் எச்சரிக்கை பலகை  வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையோரத்தில் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து,  இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழை காலத்தில் சாலையில் படியும் தண்ணீரை சேமிப்பதற்காக சாலையோரங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த மழைநீர் வடிகால் சுற்றி முழுமையாக எச்சரிக்கை பலகை வைக்கப்படாததால், இதுபோன்ற விபத்து அரங்கேறி வருகின்றன.

அண்மையில் கூட, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தம்பதி உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையுடன் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வாகனம் ஒன்று வந்ததால், பள்ளம் இருப்பதை பார்க்காமல் வண்டியை திருப்பியுள்ளனர். இதில், வண்டியுடன் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே தம்பதி உயிரிழந்த நிலையில், 12 வயது சிறுமி படுகாயம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us