தமிழக பட்ஜெட்டில் 30% கொள்ளையடிக்கும் ஸ்டாலின் சார்… விஜய் கடுமையாக சாடல்!

Tvk leader Vijay: தமிழக அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 20 சதவீதம் ஸ்டாலின் சாருக்கும், 10 சதவீதம் அவரது அமைச்சர்களுக்கும் செல்வதாக, அதாவது கொள்ளை அடிப்பதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட்டில் 30% கொள்ளையடிக்கும் ஸ்டாலின் சார்... விஜய் கடுமையாக சாடல்!

தமிழக பட்ஜெட்டில் 30% கொள்ளையடிக்கும் ஸ்டாலின் சார்

Updated On: 

07 Mar 2026 18:54 PM

 IST

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (மார்ச் 7) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்று வழக்கம் போல தனது பாணியில் ஒரு குட்டி கதையை தொடங்கி தனது உரையை ஆரம்பித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, அவரது உரையின் இறுதியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்து பேசி இருந்தார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் பேசியதாவது: தமிழகத்தில் ரூ.4.39 லட்சம் கோடிக்கு பட்ஜெய் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், 30 சதவீதம் ஸ்டாலின் சார் டேக்ஸ்-க்கு செல்கிறது. இது என்ன டேக்ஸ் என்னவென்றால்.

ஸ்டாலின் சார் டேக்ஸ் என்றால் என்ன

தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கக் கூடிய நிதியில் 20 சதவீதம் ஸ்டாலின் சாருக்கும், 10 சதவீதம் அவருடைய அமைச்சர்களுக்கும் செல்கிறது. பொதுவாக அரசுக்கு தான் மக்கள் வரி அளிப்பார்கள். ஆனால், அரசே ஒருவருக்கு வரி அளிக்கிறது என்றால், அதற்கு பெயர் தான் ஸ்டாலின் சார் டேக்ஸ் ஆகும். இதை விட நாகரிகமாக நீங்கள் அடிக்கிற கொள்ளையும், ஊழலையும் சொல்ல முடியாது. மக்களுக்காக ஒதுக்கக்கூடிய பணத்தை நீங்கள் சைடாக ஒதுக்காமல், மொத்த பணத்தையும் மக்களுக்காக செலவு செய்தால் அருமையான அரசாங்கத்தை வழங்கியிருக்க முடியும்.

மேலும் படிக்க: தாலிக்கு ஒரு பவுன் தங்கம் முதல் மோதிரம் வரை… தவெகவின் மாஸ் வாக்குறுதி!

தமிழக அரசின் நிதி பற்றாக்குறைக்கு காரணம்

அரசிடம் பணம் இல்லை… பணம் இல்லை என்று கூறிவிட்டு அதிகாலையில் ஒவ்வொருவரின் வங்கி கணக்குக்கும் ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என பணத்தை செலுத்துகின்றனர். இது எப்படி வழங்க முடிகிறது. அப்படி என்றால் அரசிடம் நிதி உள்ளது. அரசிடம் பற்றாக்குறை இருப்பதே காரணம். அந்த பற்றாக்குறைக்கான காரணம் இது போன்ற ஸ்டாலின் சார் டேக்ஸ் எடுத்துக் கொள்வதே ஆகும். இந்த முறைகளை ஒழித்தாலே அனைத்தும் சரியாகும். எல்லாம் தானாகவே நன்றாக நடக்கும் என்று தெரிவித்தார். இறுதியாக நல்லதே நடக்கும். நம்பிக்கையாக இருங்கள் என்று கூறி விஜய் தனது உரையை முடித்தார்.

திமுக அரசு மீது தொடர் விமர்சனம்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது முதல் மாநில மாநாடு முதல் அனைத்து கட்சி சார்ந்த நிகழ்வுகளிலும் ஆளும் திமுக அரசையும், முதல்வர் மு. க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதே போல, தற்போதும் திமுக அரசு மீதான விமர்சனத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முன் வைத்து பேசியுள்ளார்.

மேலும் படிக்க: ரீசன்டா சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்கு…. விவாகரத்து விவகாரம் குறித்து பேசிய விஜய்?

Follow Us
Related Stories
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கடும் குழப்பம்!!
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. மாநிலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மே 4!
தமிழகத்தில் இங்கெல்லாம் கனமழை வெளுத்துவாங்கும்.. வெயிலுக்கு ரெஸ்ட்.. வானிலை ரிப்போர்ட் இதோ..
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் செல்ல திட்டமா.. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!
NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..