AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு.. முதல்வர் விஜய்யின் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிப்பெற்றது என அறிவிப்பு..

தமிழக வெற்றிக்கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு 144 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு.. முதல்வர் விஜய்யின் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிப்பெற்றது என அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 13 May 2026 12:59 PM IST

தமிழக வெற்றிக்கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு 144 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல், 22 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற்றுவிட்டதாக சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார்.

புதிதாக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை இல்லாத காரணத்தால், மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

6 பிரிவுகளாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு:

இதில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து பேசத் தொடங்கினர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையின் அனைத்து நுழைவாயில்களையும் மூட சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்களை எழுந்து நிற்க வைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முதல் பிரிவில் 30 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இரண்டாவது பிரிவில் 42 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். மூன்றாவது பிரிவில் 46 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். நான்காவது பிரிவில், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

144 பேர் ஆதரவு:

ஐந்தாவது மற்றும் ஆறாவது பிரிவுகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், தமிழக அரசை ஆதரித்து மொத்தம் 144 பேர் எழுந்து நின்றனர். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக்கழக அரசு வெற்றி பெற்றது. இதனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில், 22 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், 5 பேர் நடுநிலை வகித்தனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க 118 பேரின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக்கழக அரசுக்கு 144 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். எனவே, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக சட்டசபையில் அறிவித்தார்.

Follow Us