கட்சி சின்னங்கள்- பெயர்கள் அச்சிடப்பட்ட பொருள்கள் விற்பனை சூடுபிடிப்பு… முதலிடத்தில் தவெக.. முழு விவரம் உள்ளே!

Tamilaga Vettri Kazhagam: ஆன்லைன் பொருள்கள்கள் விற்பனை தளங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளை விட தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், கட்சி சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பொருள்கள் விற்பனை அதிகமாகவும், அமோகமாகவும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சி சின்னங்கள்- பெயர்கள் அச்சிடப்பட்ட பொருள்கள் விற்பனை சூடுபிடிப்பு... முதலிடத்தில் தவெக.. முழு விவரம் உள்ளே!

ஆன்லைன் பொருள்கள் விற்பனை தளத்தில் தவெக முன்னிலை

Published: 

28 Mar 2026 07:09 AM

 IST

தமிழகத்தில் தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சிகளின் சின்னங்கள், கட்சிகளின் கொடிகள் உள்ளிட்டவை அச்சிடப்பட்ட பொருட்களின் விற்பனை உச்சத்தை அடைவது வழக்கமாகும். இதில், தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றின் பெயர்கள், சின்னங்கள் ஆகியவை அச்சிடப்பட்ட பொருள்கள் அதிக அளவு விற்பனையாகும். ஆனால், தற்போது இதற்கு மாற்றாக தமிழக அரசியலில் புது வரவாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் படம், கட்சியின் சின்னம், கட்சியின் கொடி ஆகியவை அச்சிடப்பட்ட பொருட்கள் அதிக அளவு விற்பனையில் முன்னிலை பெற்றுள்ளது. இதில், ஆன்லைன் பொள்கள் விற்பனை தளங்களில் தவெக தலைவர் விஜய் படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகள், வெள்ளை நிற சட்டைகள், தவெக பேட்ஜ், தொப்பிகள் என விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

டி-சர்ட்டுகள், சுடிதார்கள், தொப்பிகள் உள்ளிட்ட…

இதே போல, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்டுகள், பெண்களுக்கான சுடிதார்கள் மற்றும் சேலைகள், தொப்பிகள், விசிறிகள், கண்ணாடிகள், கைப்பை என பல்வேறு வகையான புதிய பொருட்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளன. ஆன்லைன் விற்பனை தளங்களில் கட்சி சின்னங்கள் அதிகம் கொண்ட பொருட்களில் திமுக மற்றும் அதிமுக போன்ற முன்னணி கட்சிகளை விட தமிழக வெற்றி கழகத்தின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் அதிக அளவு விற்பனை நடைபெறுகிறது.

மேலும் படிக்க: காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி. செல்வம்.. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்…

ஆன்லைன் பொருள்கள் விற்பனையில் தவெக முதலிடம்

இதனால், அந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் தமிழக வெற்றி கழகத்தின் பெயர், சின்னம், விஜய் படம் ஆகியவை பொறிக்கப்பட்ட பொருட்களை அதிகளவு முன்பதிவு செய்து வாங்கி வருகின்றனர். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் இளம் தலைமுறை மேலும் கவர்வதற்காக தமிழக வெற்றி கழகத்தின் சின்னங்கள் உள்ளிட்டவை பொறிக்கப்பட்ட பொருட்களை அதிகளவு தயார் செய்து விற்பனைக்காக இறக்கி உள்ளனர். இதில், விஜய் படம் பொறிக்கப்பட்ட கீ செயின்கள், சாவி கொத்துகள், கடிகாரம், தொப்பி, பரிசு பொருட்கள், பேனா, ஆடைகள் உள்ளிட்டவை அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களுக்கும் டி-சர்ட்டுகள் வடிவமைப்பு

இதில், வழக்கமாக திமுக மற்றும் அதிமுகவினர் டி- சர்ட், கட்சி கொடிகள், சால்வைகள் ஆகிய வழக்கமான பொருட்களை மட்டுமே வாங்கி செல்கின்றனர். ஆனால், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் பொருட்களின் தரம் மற்றும் அதன் ஸ்டைல் ஆகியவற்றுக்காக கூடுதல் விலை கொடுத்து டி சர்ட் உள்ளிட்ட பொருள்களை வாங்கி செல்கின்றனராம். அதிலும், முன்பு ஆண்களுக்கு மட்டுமே டி சர்ட் இருந்த நிலையில், தற்போது, பெண்களுக்கும் டி சர்ட் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடத்தில் திடீரென பள்ளம் வந்தது எப்படி? விஜய் பரபரப்பு கேள்வி

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்