எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய்? டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்
டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தலைமைச் செயலர் சாய்குமார் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதன் அடிப்படையில் தவெக தலைவர் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்ப வழங்கப்பட்டது என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, மே 7 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து அதிக தொகுதிகளில் வென்றதன் அடிப்படையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் விஜய்க்கு பெரும்பான்மை இல்லை எனக்கூறி ஆளுநர் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. தற்போது காங்கிரஸ் மட்டும் ஆதரவு அளித்துள்ள நிலையில் மற்ற கட்சிகளிடம் தவெகவினர் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தலைமைச் செயலர் சாய்குமார் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.




இதையும் படிக்க : தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி
அப்போது, எதன் அடிப்படையில் தவெக தலைவர் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்ப வழங்கப்பட்டது என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாகவும், டிஜிபி மற்றும் தலைமைச் செயலரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மே 4, 2026 அன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிக தொகுதிகளில் வென்ற தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டதோடு, கான்வாய் வழங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு மே 6, 2026 அன்று திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆதரவு தேடும் தவெக
Chennai, Tamil Nadu | TVK Joint General Secretary CTR Nirmal Kumar says, “TVK had reached out to parties including Viduthalai Chiruthaigal Katchi, Communist Party of India (Marxist) and Communist Party of India through emails as well as direct communication seeking their… pic.twitter.com/aMA1XOi9IQ
— ANI (@ANI) May 7, 2026
இந்த நிலையில் தவெக ஆட்சியமைப்பதற்கான 118 ஆதரவை பெற அக்கட்சி நிர்வாகிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக மற்றும் திமுக இணைந்து ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு தரவிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதையும் படிக்க : காலத்தின் கட்டாயம்.. மாநிலத்தின் நலனுக்காகவே தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் விளக்கம்
இதனை 2 கட்சிகளும் மறுத்துள்ளன. குறிப்பாக தனது எம்எல்ஏகள் சந்திப்பில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவு; இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம்; இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், நிலையான ஆட்சி வேண்டுமென்பதே நமது நோக்கம் திராவிட இயக்க கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக்கூடாது என்பதை பரிசீலிப்பதும் கட்டாயம் என்று தெரிவித்திருந்தார். இதுவும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.