இந்தியா கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது – செல்வப்பெருந்தகை உறுதி
India Alliance : இந்தியா கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இன்னும் சில நிமிடங்களில் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்தார்.
சென்னை, நவம்பர் 20 : சென்னையில் நடைபெற்ற விழாவில் அமலாக்கத்துறை, சிபிஐ (CBI) விசாரணைகள் ஆகியவை இந்தியா கூட்டணியை உடைக்க முடியாது என தமிழக காங்கிரஸ் (Congress) தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார். கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இந்தியா கூட்டணி உடைகிறதா என பல யூகங்கள் வெளியான நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நவம்பர் 20, 2025 அன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது. இது மிகவும் வலிமையான கூட்டணி என்று அவர் உறுதியாக கூறினார். மேலும் இன்னும் சில நிமிடங்களில் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றார்.
‘இந்தியா கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது’




பிரபல பத்திரிகையாளர் செந்தில் வேல் எழுதிய திராவிடம் 2.0 ஏன்? என்ற புத்தக வெளியீட்டு விழா, நவம்பர் 20, 2025 அன்று சென்னை சர் பிட்டி தியாகராயர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் சிற்பபு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதையும் படிக்க : +2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!
அப்போது பேசிய அவர், அந்த காலத்தில் வட இந்தியாவில் படையெடுப்புகள் வந்தது போல, இன்று அமலாக்கத்துறை, சிபிஐ வடிவில் வருகின்றனர். என்ன வந்தாலும் தமிழர்கள் அதனை எதிர்த்து வெற்றிபெறுவார்கள். இந்தியா கூட்டணியை உடைக்க பலர் முயற்சிக்கிறார்கள். ஆனால், இந்தியா கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. அதற்கான அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்றார்.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய செல்வப்பெருந்தகை
இன்று 20.11.2025 சென்னை சர்.பி.டி. தியாகராய அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் @Senthilvel79 அவர்கள் எழுதிய திராவிடம் 2.0 புத்தக அறிமுக விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள், தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு… pic.twitter.com/S3aXMHILyl
— Selvaperunthagai Office (@OfficeOfSPK) November 20, 2025
இதையும் படிக்க : “ஆட்சியில் பங்கு வேண்டும்.. ஆனால் வேண்டாம்”… என்ன சொல்கிறது விசிக?
இந்தியா கூட்டணி உடைவதாகவும், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல் வெளியானது. மேலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.