Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெருங்கும் தேர்தல்.. திமுக – காங்கிரஸ் இடையே வெடிக்கும் மோதல்!!

clash between DMK and Congress: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும், தொகுப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையே ஏற்படவில்லை அதற்குள் இரு கட்சித் தலைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெருங்கும் தேர்தல்.. திமுக – காங்கிரஸ் இடையே வெடிக்கும் மோதல்!!
அமைச்சர் துரைமுருகன், காங்., தலைவர் செல்வப்பெருந்தகை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Oct 2025 17:09 PM IST

செம்பரம்பாக்கம் ஏரி தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையே காரசார விவாதம் எழுந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்தது குறித்து தனக்கு ஏன் தகவல் அளிக்கவில்லை என செல்வப்பெருந்தகை அதிகாரிகளை கடிந்துகொண்டார். மக்கள் பிரதிநிதியாக அவர்கள் அதிகாரிகளை கேள்வி கேட்டால் அவர் உரிய பதிலளிக்கவில்லை என்றும் சாடியிருந்தார். இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியபோது, ஒரு அதிகாரி மக்கள் பிரதிநிதியை அழைப்பது கட்டாயம் கிடையாது என்று பதிலளித்துள்ளார். இவ்வாறு இருவருக்கும் இடையே ஏற்பட்ட காரசார விவாதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Also read: ஒருவர் வேணாம்னு சொல்லிட்டார்… பாமகவின் புதிய செயல் தலைவர்… தன் மகள் ஸ்ரீகாந்தியை அறிவித்த ராமதாஸ்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுககாங்கிரஸ் தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைகளில் அதிருப்தி வெளிப்பட்டு வருகிறது. ஏற்கெனவ, கரூர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விஜய்யை தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அதாவது, விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே அவரோடு காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய்க்கு கேரளாவில் அதிக செல்வாக்கு உள்ளதால், கண்டிப்பாக இரு மாநிலங்களை கணக்கு செய்து காங்கிரஸ் அவரை தங்கள் பிடியில் வைக்க முயற்சி செய்யும் என்று கூறப்பட்டது. அதோடு, விஜய்யும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு உரிய அதிகாரப் பங்களிப்பு வழங்குவோம் என்று மேடையிலையே உறுதியளித்துவிட்டார்.

இது இப்படியிருக்க, அண்மையில் காங்கிரஸ் நாடாளுமன்ற கொறடா மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை அளிப்பவர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும், இல்லையென்றால், முன்னாள் முதல்வராகவே திருப்தி அடைய நேரிடும் என்று தெரிவித்துள்ளார். அதோடு, துணை முதல்வர், அமைச்சர்கள் என ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென அக்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.

Also read:
அதிமுக யாரையும் கூட்டணிக்கு வற்புறுத்தாது.. அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜூ

இவ்விவகாரம் ஒருபக்கம் இப்படி செல்ல, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதிகாரிகள் தான் அழைத்தால் போனை கூட எடுப்பதில்லை, செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்ததை தனக்கு தெரிவிக்கவில்லை என கடிந்துக்கொண்டார். இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியபோது, ஒரு அதிகாரி மக்கள் பிரதிநிதியை அழைப்பது கட்டாயம் கிடையாது என்று பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து, துரைமுருகனுக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, எங்களுக்கு இருக்கும் கோவணமே சுயமரியாதை தான். அதையும் இழக்க வேண்டுமா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், ஆட்சியாளர் என்பது வேறு. அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் வேறு. அதிகாரிகளை கேட்பதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும் என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.