Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒருவர் வேணாம்னு சொல்லிட்டார்… பாமகவின் புதிய செயல் தலைவர்… தன் மகள் ஸ்ரீகாந்தியை அறிவித்த ராமதாஸ்

Major Change in PMK Leadership: பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த உள்கட்சிப் பிரச்சினையில் புதிய திருப்பமாக, கட்சியின் புதிய செயல் தலைவராக ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒருவர் வேணாம்னு சொல்லிட்டார்… பாமகவின் புதிய செயல் தலைவர்… தன் மகள் ஸ்ரீகாந்தியை அறிவித்த ராமதாஸ்
மகள் ஸ்ரீகாந்தியுடன் ராமதாஸ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Oct 2025 15:19 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) மற்றும் கட்சியின் தற்போதைய தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. மேலும் தனது மகன் அன்புமணி கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு விரோதமாக செயல்படுவதாக ராமதாஸ் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அன்புமணிக்கு (Anbumani Ramadoss) எதிராக 16 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணி அதற்கு பதில் அளிக்காத நிலையில், அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். இது அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தன் மகள் ஸ்ரீகாந்தியை பாமகவின் செயல் தலைவராக ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

பாமகவின் செயல் தலைவராக காந்திமதி நியமனம்

கட்சியின் புதிய செயல் தலைவராக ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அக்டோபர் 25, 2025 அன்று தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் அறிவித்தார். கூட்டத்தில் பேசுகையில் ராமதாஸ் கூறியதாவது, காந்திமதி கட்சியை பலப்படுத்துவார். கட்சியின் எதிர்காலத்திற்கும், எனக்கும் பாதுகாப்பான நபர் அவர்தான். எனவே, அவரை புதிய செயல் தலைவராக நியமிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : சிட்டிக்கு நடுவே இப்படி ஒரு இடமா? இயற்கை எழில் கொஞ்சும் தொல்காப்பிய பூங்கா.. சிறப்பம்சம், நுழைவு கட்டணம் விவரம் இதோ..

மேலும் பேசிய அவர்,  கட்சியின் நலனுக்காக செயல் தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கினேன். அதனை ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எனவே, அப்பொறுப்பை பெரிய மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குகிறேன். பாமக என்பது நான் போட்ட விதை, 47 ஆண்டுகாலம் பள்ளம், மேடு, இருட்டு என பார்க்காமல் கட்சியை வளர்த்தவன் நான். அன்புமணிக்கும், இதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்றார். அவரது இந்த அறிவிப்பால் கட்சியின் உட்கட்சி பிரச்னை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த விவகாரத்தில் அன்புமணியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும், அவர் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அதிமுக யாரையும் கூட்டணிக்கு வற்புறுத்தாது.. அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜூ

அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் அன்புமணி

இதற்கிடையில் அன்புணி ராமதாஸ் பாஜக – அதிமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியை பலப்படுத்த வலுவான கூட்டணி தேவை என்பதால் அன்புமணி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாமக சார்பில் 30 இடங்கள் கேட்கவும் அவர் முடிவெடுத்திருக்கிறாராம். ஆனால் பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே உட்கட்சி மோதல் நிலவுவதால், கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் நிலவுகிறது. தற்போது பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இணையவிருப்பதாக கூறப்படுவதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.