AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஞாயிற்று கிழமை அட்டவணையில் சேவை.. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Southern Railway Ramzan Announcement | இந்தியா முழுவதும் நாளை (மார்ச் 21, 2026) இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், நாளை டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஞாயிற்று கிழமை அட்டவணையில் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஞாயிற்று கிழமை அட்டவணையில் சேவை.. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Mar 2026 07:48 AM IST

சென்னை, மார்ச் 20 : இந்தியாவில் (India) நாளை (மார்ச் 21, 2026) ரம்ஜான் பண்டிகை (Ramzan Festival) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு வழக்கமாக விடுமுறை அளிக்கப்படும் நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஞாயிற்று கிழமை அட்டவணையில் இயங்கும் என்று தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

இஸ்லாமியர்கள் நாற்பது நாட்கள் நோன்பு இருந்து கொண்டாடும் மிக முக்கிய பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. அவ்வாறு இஸ்லாமியர்கள் நோன்பு இருக்கும் காலம், இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அருளப்பட்ட புனித மாதமாகவும் கருதப்படுகிறது. சுய கட்டுப்பாட்டை மேம்படுத்தி ஏழை, எளிய மக்களின் பசி பட்டினியை போக்கும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான ரம்ஜான் பண்டிகை நாளை (மார்ச் 21, 2026) இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதையும் படிங்க : சட்டமன்ற தேர்தல் 2026 : தபால் வாக்கு – கூடுதலாக 5 துறைகள் சேர்ப்பு – யாரெல்லாம் தபால் ஓட்டு செலுத்தலாம்?

ஞாயிற்று கிழமை அட்டவணையில் முன்பதிவு மையங்கள் இயங்கும்

நாளை ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாட உள்ள நிலையில், தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள பயணிகள் டிக்கெட் முன்பதிவு மையங்கள், ஞாயிற்று கிழமை கால அட்டவணையில் இயங்கும். அதாவது, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சசிகலா உடன் கூட்டணி பேச்சுவார்த்தை.. வட மாவட்டங்களில் 40 இடங்களை குறிவைக்கும் ராமதாஸ்

வெறும் 6 மணி நேரம் மட்டுமே செயல்படும் டிக்கெட் முன்பதிவு மையங்கள்

எனவே, முன்பதிவு மையங்களுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய நினைக்கும் பொதுமக்கள், நாளை வழங்கப்படும் இந்த 6 மணி நேர சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நாளை டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us