விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கிய இளைஞர் – சிகிச்சை பலனின்றி மரணம்

College Student Dies: தஞ்சாவூர் அருகே நடிகர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில், கல்லூரி மாணவர் விக்னேஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கிய இளைஞர் - சிகிச்சை பலனின்றி மரணம்

விஜய்

Updated On: 

23 Mar 2026 20:42 PM

 IST

தஞ்சாவூர் அருகே தவெக விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில், கல்லூரி மாணவர் விக்னேஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் கடந்த மார்ச் 4, 2026 அன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து வாகனம் மூலம் தஞ்சாவூர் செங்கிபட்டிக்கு வந்தார். அப்போது அவரை இருசக்கர வாகனங்களில் ஏராளமான இளைஞர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்த இளைஞர் மரணம்

இந்த நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனம் காவல்துறை வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த விக்னேஷை உடனடியாக மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயமடைந்திருப்பதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இந்த நிலையில் விக்னேஷின் தந்தை உடனடியாக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு வந்து தனது மகனின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  தன் மகன் தன்னிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாகவும் விஜய் மாநாட்டுக்கு சென்ற தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார். மேலும் அது தனது மகனின் இருசக்கர வாகனம் இல்லை எனவும் தனது நண்பரிடம் வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தான் பால் வியாபாரம் செய்வதாகவும், தன் மகனின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையும் படிக்க : குப்பை கொட்டியதில் தகராறு… கிரிக்கெட் மட்டையால் தாக்கி காரை ஏற்றி கொல்ல முயற்சி! காலில் நரம்பு துண்டிப்பு!

இந்த நிலையில் கல்லூரி மாணவர் விக்னேஷிற்கு தஞ்சாவூர் அரசு மரு்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  அவரை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் 19 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 23, 2026 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் தவெக தொண்டர்கள் மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..