இங்கிலாந்தில் நடந்த ஒரு விசித்திர சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. 42 வயதான டாமி லின்ச் என்ற நபர், ஒரு நாள் காலை எழுந்தபோது தனது உடல் முழுவதும் நீல நிறமாக மாறியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் மிகவும் பதட்டமடைந்ததால், நண்பர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் அவசர நிலை என கருதி, அவருக்கு ஆக்சிஜன் அளித்து பரிசோதனை மேற்கொண்டனர்.