பிரபல தமிழ் இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பவன் கல்யாணின் 'உஸ்தாத் பகத் சிங்' திரைப்பட நிகழ்வில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து தனது விளக்கத்தை அளித்து மன்னிப்பு கோரியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற அந்த பிரம்மாண்டமான நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அவர் பேசிய விதம் மற்றும் சில செய்கைகள், அங்கிருந்த ரசிகர்களுக்கும் சமூக வலைதளவாசிகளுக்கும் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.