AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டு கட்டாக பணம்.. அதிவேகமாக காரை ஓட்டிச் சென்ற ஐடி பெண் தலை துண்டாகி பலி.. அதிர்ச்சி சம்பவம்!

Woman Died In Car Accident While Driving Car In High Speed | சென்னையில் இருந்து உபாசனா என்ற பெண் கோயம்புத்தூருக்கு அதிவேகமாக காரை ஓட்டிச் சென்ற நிலையில், கார் மரத்தில் மோதியதில் தலை துண்டாகி பலியாகியுள்ளார். அவர் குடும்பத்துடன் பயணம் செய்த அந்த காரில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது.

கட்டு கட்டாக பணம்.. அதிவேகமாக காரை ஓட்டிச் சென்ற ஐடி பெண் தலை துண்டாகி பலி.. அதிர்ச்சி சம்பவம்!
கார் விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Mar 2026 13:43 PM IST

சென்னை, மார்ச் 22 : சென்னையில் (Chennai) இருந்து கோயம்புத்தூருக்கு (Coimbatore) கூகுள் மேப் உதவியுடன் ஐடி பெண் ஊழியர் ஒருவர் குறுக்கு வழியில் பயணம் செய்துள்ளார். அவர் காரில் அதிவேகமாக சென்ற நிலையில், மரத்தில் மோதி கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட காரில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விபத்துக்குள்ளான காரில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூகுள் மேப் பார்த்து காரில் அதிவேகமாக சென்ற ஐடி ஊழியர்

கோவையை சேர்ந்தவர் வெங்கடேஷ், இவர் சென்னையில் உள்ள எஸ் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உபசனா என்ற 28 வயது பெண், ஐடியில் பணியாற்றி வந்துள்ளார். உபாசனாவுக்கு சென்னையில் இருந்து கோவைக்கு பணி இடம் மாற்றம் கிடைத்துள்ளது. இந்த நிலையில், அவர் வீட்டு உபயோக பொருட்களை வேணில் ஏற்றி வைத்து ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் தன்னுடைய காரில் அதிகாலையில் ஊருக்கு கிளம்பி சென்றுள்ளார்.

இதையும் படிங்க : சென்னை சென்டிரல் – புதுடெல்லி விரைவு ரயில் சேவை நீட்டிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

உபாசனா, கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டிச் சென்றுள்ளார். வழக்கமாக செல்லும் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலை வழியாக செல்லாமல், கூகுள் மேப் காட்டியபடி சின்ன சேலம் வழியாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். அதிகாலை நேரம் என்பதால் உபாசனா காரை மிக வேகமக ஓட்டிச் சென்றுள்ளார். உபாசனா காரை ஒட்டிய நிலையில், அவரது கணவர், மாமியார், மகன் ஆகாஷ் மற்றும் அவரது உறவினராக சிவகுமார் ஆகியோர் காரில் அயர்ந்து தூங்கியுள்ளனர். அப்போது உபாசனாவுக்கு தூக்கம் வந்துள்ளது.

மரத்தில் மோதி சிதைத்த கார்

இந்த நிலையில், தத்தாதிருபுரம் பகுதி அருகே வந்தபோது உபாசனா லாரி ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலை ஓர பள்ளத்தில் கார் கவிழ்ந்த நிலையில், மரத்தின் மீது மோதி கார் முற்றிலுமாக சிதைந்துள்ளது. இதன் காரணமாக காரை ஓட்டிச் சென்ற உபாசனா மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது மாமியார் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் உபாசனாவின் உடலில் இருந்து தலை தனியாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ஒரே சிதையில் 2 உடல்கள்? அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள் – என்ன நடந்தது?

காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த உபாசானாவின் கணவன்,  மகன் மற்றும் உறவினர் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் காரில் இருந்து கட்டு கட்டாக பணம் விழுந்து கிடந்த நிலையில், அவற்றை ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் ஒப்படைத்ததாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் வாகன சோதனையில் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காக வேறு வழியில் அதிகாலையில் பயணம் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us