AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Sathankulam Father and Son Case : சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் மரண வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வாசித்து வருகிறார்.  அதில் தந்தை, மகன் இருவருக்கும் போலீஸ்காரர்களால் தான் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது என நீதிபதி தெரிவித்துள்ளார். 

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
பென்னிக்ஸ் - ஜெயராஜ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Mar 2026 18:12 PM IST

மதுரை, மார்ச் 22 : சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.  அதில் தந்தை, மகன் இருவருக்கும் போலீஸ்காரர்களால் தான் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது என நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும்,  தந்தை மற்றும் மகன் இருவருக்கும் மரணத்தை விளைவிக்கும் காயங்கள் இருந்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்

இந்த வழக்கில் சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  ஈடுப்பட்ட காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  இந்த வழக்கில் தண்டனை விபரம் ஏப்ரல் 9, 2026 அன்று தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதில் காவல்துறையினர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, முத்துராஜ், சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ், முருகன் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : குப்பை கொட்டியதில் தகராறு… கிரிக்கெட் மட்டையால் தாக்கி காரை ஏற்றி கொல்ல முயற்சி! காலில் நரம்பு துண்டிப்பு!

சிபிஐ குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்

மேலும் இந்த வழக்கில் நீதிபதி பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளார். அதில் நாம் அடித்து பழகுவதற்கு அப்பா – மகன் கிடைத்துள்ளனர். அடித்து பயிற்சி எடுத்துக்கொள்வோம் என காவல்துறையினர் அவர்களுக்குள் பேசிக்கொண்டுள்ளனர் என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடை நடத்த அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தந்தை மகன் இருவரும் விசாரணைக்காக சாத்தன்குளம் கவால் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : கட்டு கட்டாக பணம்.. அதிவேகமாக காரை ஓட்டிச் சென்ற ஐடி பெண் தலை துண்டாகி பலி.. அதிர்ச்சி சம்பவம்!

காவல்துறையினர் விசாரணையின் போதே இருவரும் பலத்த காயமடைந்ததாகவும் ஆனால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் இருவரையும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் 23, 2026 அன்று தந்தை மற்றும் மகன் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்ததனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 காவலர்களும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்னர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் காலமானார். இந்த வழக்கில் பெண் காவல்துறையினர் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அளித்த சாட்சியங்கள் முக்கிய ஆதராம கருதப்பட்டன. இந்த நிலையில் தான் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

Follow Us