Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை மக்களுக்கு ஷாக்.. டீ, காஃபி விலை கடுமையாக உயர்வு.. இவ்வளவா?

Coimbatore Tea, Coffee Prices Hike : சென்னையை தொடர்ந்து, கோவை மாவட்டத்திலும் டீ, காஃபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் டீ 20 ரூபாயாகவும், காஃபி 26 ரூபாயாகவும், பிளாக் டீ ரூ.17 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது டீ, காஃபி பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

கோவை மக்களுக்கு ஷாக்..  டீ, காஃபி விலை கடுமையாக உயர்வு.. இவ்வளவா?
டீ, காபி விலை உயர்வு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 04 Sep 2025 17:01 PM IST

கோயம்புத்தூர், செப்டம்பர் 4 : சென்னையை தொடர்ந்து, கோயம்புத்தூர் (Coimbatore Tea Coffee Price Hike) மாவட்டத்திலும் டீ, காஃபி விலை உயர்ந்துள்ளது. இது டீ, காஃபி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் கடந்த வாரம் தேநீரின் விலை ரூ.15 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், கோவையிலும் முக்கியமான பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் டீ 20 ரூபாயாகவும், காஃபி ரூ.26 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதுதமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் டீ, காஃபி ஆகியவை மக்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கியமாகிவிட்டது. காலை முதல் இரவு வரை பலரும் டீ, காஃபி குடித்து வருகின்றனர். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தெருவுக்கு பத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே டீ கடைகள் அதிகம் இருக்கின்றன. அந்த அளவுக்கு மக்கள் டீ, காஃபியை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தலைநகர் சென்னையில் 2025 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டீ, காஃபி விலை உயர்ந்தது. அதன்படி, சென்னையில் காஃபி 20 ருபாய்க்கும், டீ 15 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், போண்டா, பஜ்ஜி, சமோசா விலையும் ரூ.3 உயர்த்தப்பட்டு, 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Also Read : இலங்கை தமிழர்கள் இனி இந்தியாவில் இருக்கலாம்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

கோவையில் டீ, காஃபி விலை கடுமையாக உயர்வு

சென்னையில் டீ, காஃபி  விலை உயர்த்தப்பட்டது டீ, காஃபி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையை  தொடர்ந்து, தற்போது கோவை மாவட்டத்திலும் டீ, காஃபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவையிலும் முக்கியமான பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Also Read : தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம்?

அதன்படி, கோவையில் ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டட தேநீர் ரூ.20 ஆகவும், ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட காஃபி ரூ.26 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதுமேலும், ராகி மால்ட் ரூ.20 ஆகவும், சுக்கு காஃபி ரூ.20 ஆகவும், பூஸ்ட், ஹார்லிங்ஸ் ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல, பார்சல் டீ, காஃபி  விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விலை உயர்வு குறித்து பேசிய கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், கடந்த 4 ஆண்டுகளாக விலை உயர்த்தப்படவில்லை என்றும், தற்போது கடை வாடகை, ஊழியர் சம்பளம், மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.